பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

The Father Loves You by Pete Briscoe

16 ல் 10 நாள்

நாள் 10

தந்தையின் மிகச்சரியான பொறுமை

தேவனே எனக்கு பொறுமையைத் தாரும், இப்பொழுதே தாரும்! —அநாமதேய நபர்

மக்கள் பெரும்பாலும் தங்கள் பூமிக்குரிய பிதாக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதன் அடிப்படையில் தேவனையும் பார்வையை உருவாக்குகிறார்கள் என்பதை நான் குறிப்பிட்டது நினைவிருக்கிறதா? நம்மில் பலருக்கு சிறந்த, அன்பான அப்பாக்கள் இருந்தாலும், சிலருக்கு தனது குடும்பத்துடன் தொடர்ந்து கோபமாக இருக்கும் தந்தையின் பிம்பம் உள்ளது. ஒருவேளை அவர் தனது வாழ்க்கையின் பிற பகுதிகளிலிருந்து மன அழுத்தத்தை தன்னை அதிகமாய் எதிர்க்காத தன் அருகிலுள்ள குடும்ப நபர்களிடத்தில் காண்பித்திருக்கலாம். அல்லது அவர் தனக்கு அருகில் உள்ளவர்கள் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கலாம், அவர்கள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றாதபோது பகுத்தறிவற்ற முறையில் நடந்து கொள்ளலாம். காரணம் எதுவாக இருந்தாலும், கோபப்படும் தகப்பன்மார்கள், பிதாவாகிய தேவன் தங்கள் தகப்பனை போல இருப்பார் என்ற யூகத்திற்கு வழிவகுக்கலாம்— எதற்கெடுத்தாலும் எல்லாவற்றிற்கும் கோபம். இது தவறானது மட்டுமல்ல வேதம் நமக்குச் சொல்லும் காரியங்களுக்கு முரணானது!

தேவன் தன்னை மோசிக்கு வெளிப்படுத்தும் போது “… நீடிய சாந்தம் உள்ள அதாவது கோபிக்கிறதற்கு தாமதப்படும்…” தகப்பனாகத் தன்னை வெளிப்படுத்தினார்(யாத்திராகமம் 34:6). மேலும் தாவீது தகப்பனைப் பற்றி இப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்லி பாடுகிறார்:

கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்....தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.. (சங்கீதம் 103:8,13-14)

பிதாவாகிய தேவன் சாந்தம் உள்ளவர்.

இதை மிகவும் கடினமான பாதையின் வழியை கற்றுக் கொண்டேன். நான் சிறிது காலம் கூடை பந்து பேச்சாளராக இருந்தேன். எனது மகன் லியாம் ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, அவன் கற்றுக்கொள்ள இன்னும் காலங்கள் இருந்தபோது, நான் (வெட்கப்படுகிறேன்) கல்லூரியில் விளையாடின போது இருந்த முதிர்ச்சியை அவனிடம் அப்போது எதிர்பார்த்தேன்! அவன் என்ன செய்கிறான் என்று பார்த்து, வேறொன்றை எதிர்பார்த்தேன், ஒரு பயிற்சியாளர் போல அவனிடம் நடந்து கொண்டேன். அவனது கண்கள் கலங்கி, கண்ணீர் தேங்கும். ஓ! நான் அல்ல தேவன் அந்த குழுவிற்கு பயிற்சி கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்!மிகவும் வருந்துகிறேன்! நான் அவனிடம் பொறுமையற்று இருந்தேன், ஒரு நாள் அவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இன்றே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

தேவன் நமது பலவீனங்களை அறிவார். நாம் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பதை அவர் அறிவார், மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ளாமல் நம்மோடான உறவை துண்டிக்கும்போது அவர் நம்மை புரிந்து கொள்கிறார். ஆச்சரியப்படும் விதமாக, நாம் "கிறிஸ்துவில் யாராக" இருக்கிறோம்  என்பதைப் பார்க்கிறார், மேலும் அவர் நம்மை யாராக வடிவமைக்கிறார் என்பதை நன்கு அறிவார். வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் செயல்முறையை அவர் அறிவார், மேலும் நாம் வளர்ச்சியின் பாதையில் செல்லும்போதும், அப்பாதையில் சோர்ந்து களைப்புடன் நடக்கையிலும் நம்முடன்  பொறுமையாக வருகிறார். நீங்கள் எப்படியோ தெரியவில்லை, ஆனால் இப்படிப்பட்ட தகப்பன் நமக்கு இருக்கிறதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன்!

அப்பா பிதாவே, உமது பொறுமை நீண்டது, ஆழமானது, அன்பானது. அத்தகைய அக்கறையுள்ள செயலுக்கு நான் தகுதியற்றவன், எனவே என்னிடம் அப்படிச் செயல்படும் அளவுக்கு அக்கறை காட்டுவதற்காக நன்றி. நான் மற்றவர்களுடன் பழகும்போது நானும் இந்தப் பொறுமையை மற்றோருக்கு காட்ட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அதனால் நீர் என்னில் ஏற்படுத்திய மாற்றத்தை அவர்கள் பார்க்கச் செய்யும்! ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

The Father Loves You by Pete Briscoe

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பீட் பிரிஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://petebriscoe.org/