பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

The Father Loves You by Pete Briscoe

16 ல் 11 நாள்

Day 11

வேண்டிய இடத்தில் கடனைத் திரும்ப வழங்குதல்

வேதத்தின்படி “அறிதல்” என்பது மிக நெருங்கிய உறவைக் குறிக்கும் காரியம். இது உண்மையில் அனுபவிப்பதை குறிக்கிறது. இது ஏதோ தலையில் தோன்றும் அறிவல்ல, மூளை சம்பந்தப்பட்டதும் அல்ல. யோவான் 8:32 சொல்கிறது, ‘சத்தியத்தையும் அறிவீர்கள்,சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.’ உங்கள் ஆன்மீகம் உங்கள் சுய சரிதையாகும்படி, உங்கள் வாழ்வில் நீங்கள் பங்கெடுங்கள்; நீங்கள் வாழ்வை அனுபவித்து, அதை “சுய சரிதை” ஆக்குங்கள். —டிம் ஹேன்சல், தூய வியர்வை

இந்த முழு நேரமும் நாம் பிதாவாகிய தேவன் யார் என்பதன் பல்வேறு அம்சங்களைப் பார்த்து வருகிறோம், அவர் நம் வாழ்வில் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைப் பற்றி பேசினோம், மேலும் அவரோடு நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதையும் பார்த்தோம். இவை நிச்சயமாக உங்கள் தலையில் இருக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்…

ஆனால் காரியம் அத்தோடு முடிவதில்லை.

இவைகளை நம் தலையில் அறிந்து வைத்திருப்பது வேறு காரியம் (தேவனைப் பற்றிய காரியங்களை அறிவது), ஆனால் அதைத் தாண்டி நம் செல்லாதிருப்பது எவ்வளவு வருத்தமான காரியம்! தேவனுடைய வழி நடத்துதலை உணர்கின்ற இருதயம் உள்ளவர்களிடம் தேவனுடைய வெளிப்பாடு ஒரு பதிலை தூண்டும். மோசே தேவனின் வெளிப்பாடு பெற்றபோது, இப்போது தான் அறிந்த தேவனுடைய பார்வையில் இருந்து தன்னைப் பார்த்தார் பின்னர் அவர் எப்படி பதிலளித்தார் தெரியுமா?

மோசே தீவிரமாக தரைமட்டும் குனிந்து  பணிந்து கொண்டான். (யாத்திராகமம் 34:8)

அவன் தேவனை துதிக்கப்படத்தக்கவராக கண்டான்.

மோசே தன் முழு சரீரத்தையும் கொண்டு தேவனே துதித்தான். இது ஏதோ அவன் மூளையில் தோன்றிய காரியம் அல்ல. அவன் உண்மையிலேயே தேவனை அனுபவித்தான், தனிப்பட்ட முறையில் தேவனை அறிந்தான். இது தேவனை அவரது ஸ்தானத்தில் பார்க்கவும் நம்மை நமது ஸ்தானத்தில் நிறுத்தவும் உதவி செய்கிறது மாத்திரமல்ல நமது இருதயத்தை மாற்றுகிறது நம்மை படைத்தவரோடு ஆவிக்குரிய அனுபவத்தில் ஆழமாக காலூன்றச் செய்கிறது.

மோசே தேவனை துதித்த பின் தேவன் மோசையின் மூலமாக மற்றொரு தன்னை தெரியப்படுத்த ஆரம்பித்தார். தேவன் தன்னை பிதாவாக வெளிப்படுத்தினார் மோசே தன்னை பிள்ளையாகப் பார்த்தான். மேலும் அவர்கள் ஒன்றாக தேவனுடைய மகிமையிலும் சத்தியத்திலும் முன்னோக்கி நடந்தனர்.

அப்பா பிதாவே, உம்மைப் பற்றி மேலும் அறிய எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் என் மூளையில் வைப்பதை நீங்கள் எடுத்து என் இதயத்திற்கு நகர்த்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இதை என் வாழ்க்கையில் உண்மையாக்கும். நான் ஒவ்வொரு நாளும் உன்னை தீவிரமாக அனுபவிக்க விரும்புகிறேன்! நான் உம்மை நேசிக்கிறேன், என் எல்லா துதிக்கும் நீரே தகுதியானவர்! ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

The Father Loves You by Pete Briscoe

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பீட் பிரிஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://petebriscoe.org/