பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

நாள் 12
மாறாத உங்கள் தகப்பன் உண்மையானவர்
உமது அன்பு தோற்காது,
அது விட்டுக் கொடுக்காது,
அது ஒரு போதும் காலியாகாது. —“ ஒன்று மாத்திரமே நிலைக்கிறது” பாடியது இயேசு கலாச்சாரம்
தந்தைகள் ஓய்வற்று இருக்கலாம். பெரும்பாலும் அவர்களின் கவனம், ஆற்றல் மற்றும் நேரம் தேவைப்படும் வேலைகள் அவர்களுக்கு இருக்கும். சில நேரம் அவர்கள் தங்கள் பொழுது போக்கிற்கும், விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்கி … அவர்களது வாழ்வின் மற்ற பகுதிகளை(அவர்கள் பிள்ளைகள், குடும்பம் ஆகியவற்றை) மறந்து நிராகரிக்கலாம்.
தேவன் கோடிக் கணக்கான மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது மட்டுமல்லாமல், அவர் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளையும் கவனித்து வேண்டியதை செய்து கொண்டிருக்கிறார். தேவனின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாம் வைத்திருக்கும் எதையும் விட சூரியக் குடும்பத்தின் செயல்பாடுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதற்காக வாய்ப்புகள் உள்ளன! அப்படியிருந்தும், நம்மோடு தேவன் கொண்டிருக்கும் அணுகுமுறையைப் பற்றி வேதம் நமக்கு என்ன சொல்கிறது தெரியுமா?
“கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்.” (யாத்திராகமம் 34:6-7)
ஏனெனில் தேவன் தேவன் தான், அவர் திசைதிருப்பப்படுவதில்லை; அவர் கவனம் சிதறுவதில்லை; அவர் சலிப்படைவதில்லை. அவருக்குத் தேவையான அனைத்தும் இப்போது அவரிடம் உள்ளது. உங்களை விட்டு விலகவோ, கைவிடவோ, வேறு எங்காவது செல்லவோ அவருக்கு எந்தக் காரணமும் இல்லை.
அவர் உண்மையுள்ளவர்.
என் அப்பா உண்மையுள்ள மனிதர். உண்மையில், அவரது இறுதிச் சடங்கில் நான் அவரைப் பற்றி என்ன சொல்லப் போகிறேன் என்று எனக்குத் தெரியும்: “அவர் தனது இரட்சகருக்கும், தனது மனைவிக்கும், அவருடைய அழைப்புக்கும் உண்மையாக இருந்தார். எங்கள் குடும்பத்தில் அந்த மாதிரி விசுவாசத்தைப் பெற்றதற்கு நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.” ஆனால் தேவனோடு ஒப்பிடும்போது, என் அப்பாவின் உண்மை மிகக் குறைவு. தேவன் ஒருபோதும் மாறுவதில்லை, ஒருபோதும் துவண்டு போவதில்லை, ஒருபோதும் தம் முதுகு காட்டுவதில்லை.
அவருடைய உண்மையில், சமாதானத்தில் அவருடைய மீட்பில் நாம் நம்பிக்கை வைக்கும்போது நம் பயம் நிறைந்த ஆத்துமாக்களில் அவைகள் இறங்குகிறது. அவர் நம்மை விட்டு எங்கும் போவதில்லை; அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்; மேலும் அவர் தனது அறிவிப்புகளைப் பின்பற்றுவார். இது நமது விசுவாசப் பாதையை சாத்தியாமாக்குகிறது மேலும் அதில் நடப்பதை நியாயப்படுத்துகிறது.
பிதாவே, உங்கள் அற்புதமான உண்மைத்தன்மைக்கு நன்றி, என் வாழ்க்கையில் நல்லது,கெட்டது அனைத்திலும் நீர் நிரந்தமானவராக இருப்பதற்காக நன்றி. உமது பிரசன்னத்தின் வாக்குறுதியை இதயத்தில் எடுத்துக்கொள்வதற்கும், எனக்கு மிகவும் தேவைப்படும்போது அதை நினைவில் வைத்துக் கொள்ள எனக்கு உதவும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருடைய கணக்கு

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்
