பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

நாள் 5
உங்களுக்கான சரியான ஏற்பாடுகள்
தேவன் அனைத்தையும் உடையவராகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் இருந்தால், அவர் நம்மை நேசித்து, அவர் செய்யும் எல்லாவற்றிலும் பரிபூரணமாகவும், பரிசுத்தமாகவும் இருந்தால், அவர் கொடுப்பதெல்லாம் எப்படி நல்ல பரிசாக எண்ணுகிறோமோ அப்படியே அவர் தடுப்பதும் நமது நன்மைக்கு, அதை நம்மால் உணர முடியாவிட்டாலும் அதனையும் நல்ல பரிசாக அங்கீகரிக்க வேண்டும். —டி.ஏ ஹிலார்ட்
சில நேரங்களில் மக்கள் தேவன் மீது காரணமற்ற எதிர்பார்ப்பை வைக்கின்றனர். அவர் வாக்களிக்காத காரியங்களை எதிர்பார்க்கின்றனர், பின்னர் அது உடனே கிடைக்கவில்லை என்று விரக்தி அடைகின்றனர். ஆனால் தேவன் நாம் விரும்புவதெல்லாம் கொடுக்கிறது இல்லை, அல்ல நமக்கு என்ன தேவையோ அதை கொடுக்கிறார்.
மோசே தனக்கும் இஸ்ரவேலருக்கும் தேவ சமூகம் எவ்வளவு அத்தியாவசிய தேவை என்பதை நன்றாய் அறிந்திருந்தார். அது ஏதோ ஒரு ஆசை அல்ல; அது அத்தியாவசிய தேவை என்பது மோசேக்கு தெரிந்திருந்தது.
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி....:எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்….” (யாத்திராகமம் 33:16-17)
மோசேயின் வேண்டுகோள் அவர்களுடைய தரிசனத்திற்கான உண்மையான தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார், அவர்களது தேவை— அவரது சமூகம். அப்படியே தேவன் செய்தார் அவர்களது தேவையை அவர் நிறைவேற்றினார் ஏனெனில் அவர் சிறப்பாய் பராமரிக்கிறவர், எப்படியெனில்:
- எல்லாம் தேவனுடையது. (சங்கீதம் 50:10-12)
- தேவன் உதாரத்துவமுள்ளவர். (அப்போஸ்தலர் நடபடிகள் 14:16-17)
- நமக்கு என்னது தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:31-32)
அவர் தருவார் என நாம் எனவே, நாம் நம்புவதை அவரிடத்தில் கேட்பது மட்டுமல்ல, அவர் நமக்குத் தேவையானதை இப்போதே வழங்குகிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்க முடியும்!
உங்கள் ஆசைகளுக்கும் உங்களது அன்பான தந்தை அறிந்த உங்கள் தேவைகளுக்குமான வித்தியாசத்தை உங்களால் சொல்ல முடியுமா? எதிர்காலத்தில்உங்கள் தேவைகளை அவர் சந்திப்பார் என்று நம்புவதைப் போல இப்போதே உங்கள் தேவைகளை சந்திக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
கர்த்தாவே, இன்று எனக்குத் தேவையான அனைத்தையும் நீர் வழங்குவதற்காக நன்றி. நான் விரும்புவதற்கும் உண்மையில் எனக்குத் தேவைப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீர் தெளிவாக்கும்படி நான் வேண்டிக் கொள்கிறேன். நேற்றைய தினம் மற்றும் அதற்கு முந்தைய நாளைப் போலவே, எனது எதிர்காலத் தேவைகளையும் வழங்குவதாக நீர் தந்த வாக்குறுதிக்கு நன்றி. ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
More
