பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

The Father Loves You by Pete Briscoe

16 ல் 4 நாள்

நாள் 4
துரயார் உன்னை அறிந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியத

நம் மனப்பான்மையை மாற்றிக் கொள்ள கூடுமானால், நாம் வாழ்க்கையை வேறு விதமாகப் பார்ப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கையே வித்தியாசமாக இருக்கும். கேத்தரின் மேன்ஸ்ஃபீல்டு

நான் பல ஆண்டுகளுக்கு முன்பு மில்வாக்கி ப்ரூவர்களுக்காக ஒரு தேவாலயம் செய்தேன். அது பெரிய விஷயமாக இருந்தது. நான் வாழ்ந்த இடத்தில், ப்ரூவர்ஸ் மட்டை, பந்து மற்றும் வைரத்தின் தலை சிறந்தோர். ஒவ்வொரு பக்தியுள்ள விஸ்கான்சின் குடிகளும் அவற்றை டிவியில் பார்த்தனர். டிக்கெட் வாங்கக்கூடியவர்கள் கவுண்டி விளையாட்டு அரங்கத்திற்கு யாத்திரை செய்வார்கள். ஆனால் லாக்கர் அறைக்குள் நுழைவதா? அதுதான் “மகா பரிசுத்தம்”—கோவிலின் உள் சரணாலயம், அங்கு எந்த ஒரு மனிதனும் செல்ல நினைக்க முடியாது.

ஆனால் உள்ளே செல்வதற்கு எனக்கு "ஒரு வழி" இருந்தது. பால் மோலிட்டர் அணியின் தலைவராக இருந்தார், மேலும் அவரை நான் அறிந்ததால் அந்த லாக்கர் அறைக்குள் அனுமதிக்கப்பட்டேன். வீரர்களோடு முகம் முகமாக பேசவும் அனுமதிக்கப்பட்டேன். அந்த முழு குழுவினரோடும் வேதாகமத்திலிருந்து சில காரியங்களை பகிர்ந்து கொண்டேன், அவர்கள் அதை கவனித்தார்கள்... இது எல்லாம் பால் மோலிட்டரால். அவர் இந்த அருமையான வீரர்களுடைய கண்களுக்கு முன்பாக வேறு நிலைக்கு உயர்த்தினார். பால் மோலிட்டரோடு எனக்கு இருந்த உறவினால் அவர்கள் எனக்கு செவி சாய்க்க தயாராக இருந்தார்கள்.

இதே போல்தான் இஸ்ரவேலர்களுக்கும் நடந்தது:

அப்போது மோசே கர்த்தரிடம் சொன்னார்... "எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.” (யாத்திராகமம் 33:16)

பிதாவாகிய தேவன் நமக்கும் அப்படியே செய்கிறார். அவருடைய சமூகம் மற்றோரிடமிருந்து நம்மை வேறு பிரிக்கிறது. அவர் நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறார்.. அவருடைய பிள்ளைகளாகிய நாம், இந்த உலகில் ஆவிக்குரிய விதத்தில் மாற்றப்பட்டு தனித்துவமாக இருக்கிறோம்...இது கிறிஸ்துவுக்குள் நமது உண்மையான வாழ்வின் செய்தியை வாழ்வின் அர்த்தத்தையும் உண்மையையும் தேடுபவர்களுக்கு ஈர்ப்புடையதாக காண்பிக்கிறது.

தந்தையே, நான் வெளிப்படையாக உலகத்திலிருந்து வேறுபட்டு இருக்கும் வகையில் என்னுடைய வாழ்க்கை முறையை உயர்த்தும்படி நான் பிரார்த்திக்கிறேன். கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதற்கு நான் ஒரு உதாரணமாக இருக்கட்டும், அதனால் மற்றவர்கள் உமது அருமையை அறிய உதவும். ஆமேன்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

The Father Loves You by Pete Briscoe

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பீட் பிரிஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://petebriscoe.org/