பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

The Father Loves You by Pete Briscoe

16 ல் 2 நாள்

நாள் 2

என் சமூகம் உன்னோடு செல்லும்

யாத்திராகமத்தில் உள்ள முதல் தந்தையின் குணம் எந்த வகையான உறவுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்: அவர் நம் அருகில் இருக்கிறார்.

‭அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். (யாத்திராகமம் 33:14)

தன்னோடு வருமாறு மோசே வேண்டியபோது, "நான் உன்னோடு வருவேன்" என தேவன் வாக்களித்தார். வேதம் முழுவதிலும் நாம் இதனை பார்க்க முடியும். நீங்கள் எங்கே சென்றாலும், தேவன் உங்களோடு இருக்கிறார்.  

என்னுடைய சிறு வயதில் எனது அப்பா அதிகம் பயணிப்பார். நாங்கள் இங்கிலாந்தில் வசித்து வந்தபோது, ​​அப்பா சில நேரங்களில் ஒரு மாதக்கணக்காக அமெரிக்காவில் மாதத்திற்கு இருப்பார். நாங்கள் அவரை மிகவும் தேடுவோம். 1970 ஆம் ஆண்டில் நாங்கள் மில்வாக்கிக்குச் சென்றதற்கு ஒரு காரணம், எங்களோடு எங்கள் தந்தை அதிக நேரம் செலவிட முடியும் என்பதே வாழ்வில்—அதாவது "எங்களோடு" அதிகம் இருக்க முடியும் என்பதே. எங்கள் தந்தை எங்களோடு இல்லாத நேரங்களில், எனது தாயார் "தேவனின் தகப்பன் தன்மை" பக்கம் என்னை திருப்பினார். எப்போதும், எல்லா நேரங்களிலும் தேவன் நம்மோடு இருக்கிறார் என சொல்லித் தந்தார்ஙள். தேவன் என் கூடவே இருக்கிறார், நான் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும்.. அப்பா அருகில் இல்லாதபோது, தேவனின் தகப்பன் குணாதிசயங்களை தேடுமாறு என் வாழ்வில் தள்ளப்பட்டேன்… அவருடைய சமூகமே எனக்கு மெய்யாயிற்று.  

தேவன் இந்த நொடியில் உங்களோடு இருக்கிறார், நீங்கள் இதை வாசிக்கும் இந்தப் பொழுது கூட, உங்கள் வாழ்வோடு பிணைந்த ஒரு தகப்பனாக இருக்கிறார். அவரை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும் அளவு எந்த மலையும் மிக உயரமானதல்ல, எந்த பள்ளத்தாக்கும்,எந்த நதியும் மிக ஆழமானது அல்ல. நீங்கள் தேவனை விட்டு ஓடவோ அல்லது அவரைப் புறக்கணிக்கவோ முயற்சி செய்யலாம், ஆனால் நீங்கள் ஒரு நொடி நின்று யோசிக்கும் அந்த தருணத்தில், அவர் இன்னும் உங்களுடன் இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

இதை யோசித்து பாருங்கள்:

‭உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். (செப்பனியா 3:17)

அவர் உங்களோடு இருப்பது மாத்திரமல், உங்களோடு இருப்பதில் அவர் மகிழ்கிறார்! உங்களை எவ்விதத்திலுமா நேசிக்க விரும்புகிறார்.

இயேசுவே, உங்கள் நிலையான சமூகத்திற்கு நன்றி. என்னை ஒருபோதும் கைவிடாத அளவுக்கு என்னை நேசித்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள தயவுசெய்து எனக்கு உதவி செய்யும், ஆமேன்.

இந்த திட்டத்தைப் பற்றி

The Father Loves You by Pete Briscoe

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பீட் பிரிஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://petebriscoe.org/