பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

The Father Loves You by Pete Briscoe

16 ல் 3 நாள்

நாள் 3
எப்போதும்-இருக்கின்ற உங்கள் ஆறுதல்

எங்களை உமக்காக படைத்தீர் ஆண்டவரே; உம்மில் வந்து இளைப்பாறும் வரை எங்கள் இருதயங்கள் இளைப்பாறுதல் அற்றிருக்கும். —அகஸ்டின்

வாழ்க்கை ஒரு போராட்டம் என்று எல்லோரும் சொல்வார்கள். நாம் எங்கு சென்றாலும் பரவாயில்லை, பலவிதமான பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுடன் போராடுகிறோம்—பொருளாதாரப் பிரச்சனைகள், உணர்வு பூர்வமான பிரச்சனைகள், உடல் சார்ந்த பிரச்சனைகள் போன்றவைகளோடு போராட்டம். மேலும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும், ஏற்கனவே சொல்லப்பட்ட தீர்வுகள் அநேகம்.நீங்களே உங்கள் பிரச்சனைகளை சரி செய்யுங்கள்" என்றும் "கடினமாக முயற்சி செய்யுங்கள்" போன்றவை பூமிக்குரிய பிதாக்களிடமிருந்து நாம் கேட்கும் சில பரிந்துரைகளில் சில.

ஆனால் அந்த இரண்டு நிலைப்பாடுகளையும் போலல்லாமல், நமது பரலோக தகப்பன் நாம் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடிய  ஒரு விஷயத்தை நமக்குச் சொல்கிறார்:

‭அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். (யாத்திராகமம் 33:14)

தேவன் நமக்கு இளைப்பாறுதலளிக்கிறாரா? நம்மில் சிலரது அப்பாக்கள் நம்மை மன மற்றும் உடல் சோர்வின் விளிம்பிற்கு மேலும் மேலும் தள்ளினர். பிதாவாகிய தேவன் அப்படி அல்ல. அவர் நமக்கு ஆறுதலளிக்கிறார். ஆம், அவர் நாம் செய்யவதற்கு சில காரியங்களை வைத்திருக்கிறார்— மேலும் அக்காரியங்கள் முக்கியமானவைள்— ஆனால் அக்காரியங்கள் எல்லாம் அவருக்காக நாம் நமது பலத்தால் செய்ய முயற்சிப்பதை பார்க்கிலும், தேவ பலத்தை நாம் சார்ந்திருப்பதாலும் தேவ பலம் நம் மூலம் கிரியை செய்வதாலும் செய்யக்கூடியதென வேதம் தெளிவாக சொல்கிறது.

“நான் [தேவன்]எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.  மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.” (ஓசியா 11:3-4)

ஓசியாவின் இந்த பகுயில், தேவன் நம் பாரங்களை மட்டும் எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் அவர் நம்மீது உள்ள முடிவில்லாத அன்பின் காரணமாக அவற்றை எடுக்க "விரும்புகிறார்" என்பதை நாம் காண்கிறோம்! அவர் உங்களுக்காக என்னவெல்லாம் செய்வார் என்பதற்கும் வரம்பு இல்லை. இது ஒரு ஆழமான கேள்வியை எழுப்புகிறது:

உங்களை நேசிக்கும் பிதாவாகிய தேவனை நம்புவதை விட்டு விட்டு, உங்கள் சொந்த பலத்தில் நீங்கள் எந்தக் காரியத்திற்காக போராடுகிறீர்கள்?

அப்பா, நான் என் மீதே சுமத்திய சுமைகளை நீர் எடுத்துக்கொள்ளும். இந்த காரியங்களை என்னால் சொந்தமாக சமாளிக்க முடியாது. என் சுய முயற்சிகளை எல்லாம் நான் உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன். நான் சொந்த முயற்சியை கைவிடுகிறேன். நான் உமது பலத்தை நம்புகிறேன், அதனால் நான் எப்போதும் உனது பெலத்தில் ஆறுதலடையவும் ஓய்வெடுக்கவும் உதவி செய்யும். ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

The Father Loves You by Pete Briscoe

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பீட் பிரிஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://petebriscoe.org/