பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

நாள் 7
நம் வாழ்வை கவனிப்பவர் நம் வாழ்வின் மேல் ஈடுபாடுடையவர்
ஜெபிப்பதற்கான ஒவ்வொரு உந்துதலுக்கும் எப்போதும் பதிலளிக்கவும். நீங்கள் படிக்கும் போதோ அல்லது உரையை புரிந்து கொள்ள முடியாமல் மனதிற்குள் சண்டையிடும் போதோ ஜெபிக்க வேண்டும் என்ற உந்துதல் வரலாம். நான் இதற்காக எனக்கு நானே ஒரு சட்டத்தை உருவாக்கினேன்—அத்தகைய தூண்டுதலுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும் என்பதே அது.— மார்ட்டின் லாய்ட்
உங்கள் தந்தையின் அலைபேசியில் 30 லட்சம் பிள்ளைகளின் தொடர்பு எண்கள் இருந்தால், அவற்றில் உங்களுடையதும் ஒரு எண்ணாக இருந்தால் உங்களை முக்கியமானவராக உணருவீர்களா? ஒரு மனிதனால் இவ்வளவு குழந்தைகள் மேல் எப்படி கவனம் செலுத்த முடியும்? கிட்டத்தட்ட கவனிக்கவே முடியாது. ஆனால் நம் பரலோகத் தகப்பனுக்கு அவருடைய வல்லமை, அறிவு, எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்கும் திறன் ஆகியவற்றில் வரம்புகள் இல்லை! மோசேயுடன் பேசியபோது அவர் இதைத் தெளிவாகக் கூறினார்:
“நான் உன் மேல் பிரியமாய் இருக்கிறேன் உன்னை பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்.” (யாத்திராகமம் 33:17 Tcv இந்திய சமகால மொழிபெயர்ப்பு)
பல ஆண்டுகளுக்கு முன்பு, இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த அர்பானா மாநாட்டில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுடன் அமர்ந்திருந்தேன். அரங்கம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், அவர்கள் எங்களில் 20,000 பேரையும் சத்தமாக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அநத் பெரும் சத்தத்தினால் அல்ல, ஆனால் தேவன் ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்கவும், அதற்குச் சரியாக பதிலளிக்கவும் வல்லவர் என்ற எளிய உண்மையை உணர்ந்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
நமது பிதாவாகிய தேவனுக்கு, நாம் செய்யும் ஜெபம் மாத்திரமே அவர் கேட்கிறார். அவரைப் பொறுத்தவரை பின்புற சத்தங்கள் ஒன்றும் கிடையாது. ஏன்?
ஏனெனில் அவர் ஈடுபாடு உடையவர்.
“இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (லூக்கா 12:6-7)
தேவன் உங்கள் பெயரை அறிந்திருக்கிறார், அது எப்போதும் அவருடைய இதயத்தில் இருக்கிறது. உங்கள் காலில் ஒரு முள் இருந்தால், அவர் அதைப் பற்றி கவலைப்படுகிறார்—பூமியில் வேறு எங்கும் வெள்ளமோ பஞ்சமோ நேரிட்டாலும். மற்றோர் மேலுள்ள கவனம் சிறிதும் குறையாமல், அவர் தனது கவனத்தை 100% உங்களுக்குக் கொடுக்க முடியும். நீங்கள் தேவனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்!
அப்பா பிதாவே, நீர் இந்த ஜெபத்தைக் கேட்பதற்கும், உமது கவனத்தை 100% என்னிடம் செலுத்துவதற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்! என் மீது அக்கறை காட்டுவதற்கும், என்னைக் கவனித்துக்கொள்வதற்கும், என்னை நேசிப்பதற்கும் நன்றி. ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருடைய கணக்கு

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்
