பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

The Father Loves You by Pete Briscoe

16 ல் 6 நாள்

நாள் 6

இன்பம் அனைத்தும் அவருடையதுThe Pleasure Is All His

என்னைப் பற்றிய எனது ஆழமான விழிப்புணர்வு என்னவென்றால், நான் இயேசு கிறிஸ்துவால் ஆழமாக நேசிக்கப்படுகிறேன், அதை சம்பாதிப்பதற்கு அல்லது அதற்குத் தகுதியடைய நான் எதுவும் செய்யவில்லை. — பிரெனன் மேனிங், தி ரகாமஃபின் காஸ்பல்

ஒருவேளை அது கலையின் மூலமாக இருக்கலாம், ஒருவேளை அனல் தெறிக்கும் ஆக்ரோசமான பிரசங்கங்கள் மூலமாக இருக்கலாம்... நிச்சயமாக எங்கே என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எங்கோ நம்மில் பலருக்கு பிதாவாகிய தேவன் கோபமாக இருக்கிறார்—எப்போதும் நாம் செய்யும் தவறை எல்லாம் எண்ணிக் கனக்கில் வைத்துக் கொண்டு...அவர் பரலோகத்தில் மேகத்தின் மீது அமர்ந்திருக்கிறார். எல்லா நேரத்திலும். அவர் ஒரு கையில் நியாயபிரமாணங்களையும் மறுபுறம் மின்னலையும் வைத்திருக்கிறார். நீங்கள் தவறுவதற்காக அவர் காத்திருக்கிறார். நீங்கள் தவறும்போது? அவ்வளவு தான்!என்று நினைக்கிறோம்

இது சரியா?

சிறிதளவு இது சரி கிடையாது.  மோசே தேவ சமூகத்தை வேண்டினபோது தேவன் சொன்ன பதிலை பாருங்கள்:

“நீ கேட்டுக்கொண்ட அதையே நான் செய்வேன். ஏனெனில் நான் உன்னிடம் பிரியமாய் இருக்கிறேன்…” (யாத்திராகமம் 33:17 Tcv இந்திய சமகால மொழிபெயர்ப்பு)

தேவன் நம்மில் பிரியமாய் இருக்கிறார்..

தேவன் மோசேயிடம் அவர் பிரியமாயிருந்ததால் அவர்களோடெயே இருப்பார் என்று கூறினார். ஒருவேளை நீங்கள் சொல்லலாம் "அவர் மோசே என் மீது பிரியமாக இருந்தார், அது மோசே. ஆனால் நான் மோசே அல்ல" என்று. மோசே இந்த சிறந்த தெய்வீகத் தலைவராக இருக்க வேண்டும், இல்லையா? ஆம், அவர் அப்டி இருந்திருக்க வேண்டும், ஆனால் அவர் அப்படி இல்லை. இந்த பகுதிக்கு முன் என்ன நடந்தது தெரியுமா? இஸ்ரவேலர்கள் ஒரு பெரிய, தங்கத்தினாலான பசுவை செய்து, கர்த்ருக்கு பதிலாக அதை வணங்கினர். மோசே ஒரு பெரிய தலைவர் என்றால், அவர் வழிநடத்திய இஸ்ரவேலர்கள், உண்மையில்  மோசே நடத்தின வழியில் நடந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் உண்மையில், அவர்கள் குழப்பவாதிகளாய் இருந்தனர்... நம்மைப் போல, உங்களைப் போலவே . நாம் தேவன் விரும்பியபடி நடப்பதில்லை எனினும் அவர் நம்மில் பிரியமாய் இருக்கிறார்.

கர்த்தாவே மனிதாபிமானம் உடைந்து விட்ட பின்னும் நீர் எங்களை நேசிப்பது புரிந்து கொள்வதற்கு கடினமாய் இருக்கிறது—மிகக் கடினமான நேரங்களிலும் கூட. தோல்வியை மட்டுமே பார்க்கும் இவ்வுலகில் கிறிஸ்துவுக்குள் நீர் என் மேல் பிரியமாய் இருப்பதற்காக நன்றி! ஆமென்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

The Father Loves You by Pete Briscoe

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பீட் பிரிஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://petebriscoe.org/