திட்ட விவரம்

பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்மாதிரி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

10 ல் 9 நாள்

நீங்கள் சரியானதை செய்கிறீர்களா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? அல்லது நீங்கள் உண்மையிலேயே தேவன் விரும்பும் இடத்தில் தான் இருக்கிறீர்களா? அல்லது வேறு ஏதாவது அல்லது பெரிய மற்றும் பெரியதான ஏதாவது உங்களுக்காக எங்காவது இருக்கிறதா? அல்லது இவ்வாறு சிந்தித்தது உண்டா, உங்கள் அழைப்பின் மதிப்பானது இன்று நீங்கள் இழக்கும் தருணங்களை விட மதிப்பு கூடியதா?


வாழ்க்கையில் பல தருணங்களில், நாம் ஒரு அறையில் விளக்குகள் எரிந்து போனத்தினால் அங்கும் இங்கும் அலைந்து, ஒரு ஒளி ிட்ச், ஒரு மெழுகுவர்த்தி, அல்லது ஒரு பிரகாச ஒளியினை கண்டுபிடிக்க அதன் மூலம் வழிகாட்டும் படிகளை அறிந்துக்கொள்ள நாம் தடுமாறுகிறோம். அந்த தருணங்களில், தேவனை நம்புங்கள். அவரது நீட்டப்பட்ட கரத்தினை இறுக்கமாக கைப்பற்றி, அடுத்த கதவுக்கு உங்களைப் பாதுகாப்பாக நடத்துவர் என்று நம்புங்கள். உலக ஒளியுடன் நாம் நடக்கும்போது இருள் பயமாக இருக்க வேண்டியதில்லை.


ஆனால் உங்களை நீங்கள் கேட்கும் அந்த கேள்விகள் நியாயமானவைகளே. உங்களது அச்சங்களும் கவலையும் உங்களுடைய அவமானமாக இருக்கக்கூடாது. நாம் ஒன்றாக உட்கார்ந்து, நம்முடைய வேலைகளைப் பற்றி, நமது உணர்வுகள் பற்றி, நமது விசுவாசத்தை பற்றி பேசும் போது நம்மில் ஒருவர் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் திட்டமிட்டபடி வாழ்கிறார்கள் என்று சொன்னால் நான் ஆச்சரியப்படுவேன். இந்த கேள்விகளுடன் ஒரு தோழி உங்கள் மேஜையில் இருந்தால் என்ன செய்வீர்கள்? அவள் கேள்விகள் நியாயமானவை என்று சொல்வீர்களா இல்லை அவள் இந்த கேள்விகளை கைவிடவேண்டும் என்று சொல்வீர்களா?


நான் அப்படி செய்ய மாடீர்கள் என்று நம்புகிறேன்.


நாங்களாக இருந்தால் அவளை நேசிப்போம், அவளுடன் ஜெபிப்போம். நாங்கள் அவளை ஊக்குவிப்போம், அவள் செய்கிறது நல்லது, தகுதியானது, மதிப்புமிக்கது , மேலும் இந்த பருவத்தில் தேவன் அவளை விரும்புகிறார் என்பது அவளுடைய ஆவிக்குத் தெரிந்தால், அது தவறில்லை என்று அவளிடம் சொல்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்போம்.


உறுதியாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவன் மனத்தாழ்மையானவர்களை எடுத்துக் கொண்டு, அவர்களை பரிசுத்தப்படுத்துவார், அந்த கீழ்ப்படிதலே (அளவு, புகழ் மற்றும் அங்கீகாரம் ஆகிய இவை ஒன்றும் இல்லை) நமது தேவனுடைய ராஜ்யத்திற்கான வேலையில் நாம் ஏற்படுத்தும் தாக்கத்தில் முக்கியமானது.


அவர் செயகின்ற எல்லாவற்றிலும் தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், நீங்கள் சேவை செய்யும்படி உங்கள் முன்னால் இருக்கும் மனிதர்கள், உங்கள் ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகள் இவை அனைத்திலும் எந்த தவறும் இல்லை.


தேவன் தனது மகிமையை ஒளிரச் செய்ய நம் கதையின் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்துவார்.


நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக கிரிஸ்டல் ஸ்டைன் மற்றும் ஹார்வெஸ்ட் ஹவுஸ் வெளியீட்டாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தகவல் அறிய https://www.harvesthousepublishers.com/books/holy-hustle-9780736972963 க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்