திட்ட விவரம்

பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்மாதிரி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

10 ல் 7 நாள்

நாங்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், வழக்கமான ஆலய ஆராதனைக்குப் பதிலாக நவீனகால முறையிலான ஆராதனையில் கலந்துகொள்ளும் பொருட்டு எங்கள் தேவாலய உடற்பயிற்சிகூடத்திலுள்ள மடக்கு நாற்காலிகளில் உட்கார்ந்தோம். எல்லோருக்கும் அழைப்பு விடுவிக்கும்படி, எங்கள் சபையானது தங்களுடைய இடம், பொருட்கள் மற்றும் சபை விசுவாசிகளை, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஐந்து காலை ஆராதனைகளிலிருந்து தேர்வுசெய்யும் நல்ல உக்கிராணக்காரராய் இருந்தது. அதேநேரத்தில் அதே பலமான வேத அடிப்படையிலான செய்தியைத் தங்கள் ஊழியம் முழுவதும் காத்துக்கொள்ளவும் செய்தது. உடற்பயிற்சிகூடத்தில் நீங்கள் ஜீன்ஸ் அணிந்த ஒரு பிரசங்கியாருடன் இருக்கலாம், ஆனால் ஆலயத்தில் பேண்டும், டையும் அணிந்த போதகரிடமிருந்து கேட்பதைப்போல் சுவிசேஷம் தெளிவாகப் பிரசங்கிக்கப்படுவதைக் கேட்கலாம்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை நானும், என் கணவரும் உதாரத்துவத்தைக் குறித்ததான ஒரு வல்லமையான செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தோம். அந்த செய்தியின் முடிவில், நாங்கள் விரும்பிய வழியில் செலவழிக்க $100 எங்களுக்குக் கிடைத்தால் நாங்கள் என்ன செய்வோம் என்பதைப் பகிர்ந்து கொள்ளும்படியாகக் கேட்கப்பட்டோம். எங்கள் குடும்பத்தின் இப்போதைய முக்கியத் தேவை என்ன? $100 எங்கள் சூழ்நிலையை எவ்வாறு மாற்றும்? கேட்டுக்கொண்டிருந்தவர்கள், வீட்டு மேம்பாட்டுத் திட்டம், பள்ளி செல்வதற்கான புது துணிமணிகள் வாங்குதல், தூரத்து உறவினருடன் ஒருவேளை உணவைப் பகிர்ந்துகொள்ளுதல் என்பனபோன்ற சில கருத்துக்களைப் பகிர்ந்தனர். அறையின் ஒரு புறத்திலிருந்த ஒரு பெண் அழுகையினூடாகப் பேசினாள். அவள் அந்த பணத்தைத் தன் குழந்தைகள் முந்தின நாள் இரவில் நிகழ்ந்த கொடூரங்கள் மற்றும் பயத்தினின்று விடுபட்டு, சில மணி நேரங்களாவது சிரித்து விளையாடும்படிக்கு நீச்சல்குள வசதியுள்ள ஒரு தங்கும்விடுதிக்கு ஒருநாள் இரவு அழைத்துச் செல்லப் பயன்படுத்துவதாகக் கூறினாள். அது அதிர்ச்சியூட்டும் உண்மையாயும், மனதைக் காயப்படுத்துவதாயும், இருதயத்தை நொறுக்குவதாயும் இருந்தது.


போதகர் அவளை முன்னால் அழைத்தார், தன்னுடைய பணப்பையிலிருந்து $100ஐ எடுத்து அவளிடம் கொடுத்தார். எந்த எதிர்பார்ப்பும் இல்லை. “உங்களுக்கு எதுவும் தெரியாது. உங்களுக்கு எதுவும் தெரியாது,” என்று சொல்லி அவள் தேம்பி தேம்பி அழுதாள். அவள் அழுதுகொண்டிருக்கையில் அருகிலிருந்த சபை விசுவாசிகள் எழுந்து, அவளை சூழ்ந்துகொண்டார்கள், ஜெபம் மற்றும் ஆதரவினாலாகிய ஒரு மதில் அவளை சுற்றிலும் உருவானது. அது திட்டமிடப் படாதது மற்றும் எதிர்பாராதது, ஆனால் ஒரு வல்லமைமிக்க சவால்.


நீங்கள் அதை செய்வீர்களா? தேவன் “கொடு” என்று சொல்லும்போது, ஒருவரை கனத்தினாலும், அன்பினாலும் மேற்கொள்வதைத் தவிர வேறு எந்த நோக்கமுமின்றி அவர்களை ஆசீர்வதிக்கும்படியாக நீங்கள் அந்த $100 ஐ பயன்படுத்துவீர்களா? நீ்ங்கள் உங்கள் பணப்பையில் ஏற்கனவே அந்தப்பணத்தை வைத்திருக்கலாம், அல்லது அதற்காக நீங்கள் 6 மாதங்கள் சேமிக்க வேண்டியதிருக்கலாம், இந்த சவாலை எடுக்கும்படியாக நாம் ஒருமித்து தீர்மானம் செய்வோமா? தேவன் நமக்குக் கொடுத்த வேலையை நாம் செய்துகொண்டே, தேவன் நமக்கு ஈந்த வாய்ப்பு, வசதிகளுக்காக நல்ல உக்கிராணக்கார்களாக இருந்து, பரிசுத்த யுத்தம் வித்தியாசமானது எனபதை மற்றவர்களுக்குக் காண்பிப்போம், ஏனெனில் நாம் மேடைகளைக் காட்டிலும் மக்களைக் குறித்து அதிகம் அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறோம்.


கருணை முக்கியமானது.


வேதவசனங்கள்

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக கிரிஸ்டல் ஸ்டைன் மற்றும் ஹார்வெஸ்ட் ஹவுஸ் வெளியீட்டாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தகவல் அறிய https://www.harvesthousepublishers.com/books/holy-hustle-9780736972963 க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்