திட்ட விவரம்

பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்மாதிரி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

10 ல் 8 நாள்

ஒரு கிராமமே தேவைப்படும் - ஒரு குழந்தையை வளர்ப்பதுக்காக மட்டுமல்ல, நம்முடைய சாதாரண உழைப்பை புனிதமானதாகவும், தேவனை மகிமைப்படுத்தும் விஷயமாகவும் மாற்றுவதற்கும்.


ஒப்பீடு. போட்டி. சமூகம். நான் உழைப்பின் அதிகரத்துவமான செய்திகளைப் பார்க்கும் போது, உலகம் நம்மைக் நோக்கி கத்தும் சத்தத்தை கேட்கிறேன், ​​ஒப்பீடு என்பது நமது போட்டியாளர்களுக்கு பதிலாக ஏன் நம் பார்வையாளர்கள் நம்மை தேர்வு செய்ய வேண்டும் என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பதாகும். போட்டி என்பது நமது தயாரிப்பு, வேலை அல்லது சொற்கள் சிறந்தவை என்று மட்டுமல்லாமல், மிகவும் தனித்துவமானவை மற்றும் மற்ற எல்லாருக்கும் முன்பாக இருப்பதை உறுதிசெய்ய இடைவிடாமல் பாடுபடுவதாகும். அதின் கதறல் இவ்வாறாக உள்ளது“நான் தான் முதலில் இங்கு வந்தேன்!” மற்றும் சமூகம்? நமது விளம்பரம், சந்தைப்படுத்தல் மற்றும் மின்னஞ்சல் செய்திமடல்களின் இலக்குகளாக மாறும் வாடிக்கையாளர்களே.


பத்து வருடங்களுக்கும் மேலாக சந்தைப்படுத்தலில் வேலை செய்த பிறகு, நான் இதை உணர்கிறேன். எனது வேலையின் பின்னணியில் உள்ள நோக்கத்தை நான் மறக்கும்போது எனது மூளை அதே வரையறைகளுக்குள் திரும்புகிறது. சேவை செய்வதற்குப் பதிலாக, நான் விற்கத் தொடங்குகிறேன், இந்த செயல்பாட்டில் நான் மக்களை விட மேலாய் இலாபங்களை மதிக்கிறேன். ஆனால் வேறு வழி இருக்கிறது. பரிசுத்த உழைப்பின் பொருளாதாரத்தில், ஒப்பீடு என்பது நம்முடைய சொந்த வேலையைப் பார்த்து, அது எவ்வாறு செயல்படுகிறது என்று தேவனிடம் கேட்பதே - அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப இருக்கின்றதா இல்லையா என்பதைக் காட்டும்படி அவருடைய சித்தத்தை அறிவது ஆகும். நமக்கு மாதிரியாகக் கருதப்படுகின்ற கிறிஸ்துவின் வாழ்க்கையுடன் நம் வாழ்க்கை எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது? போட்டி என்பது நாம் வெல்வதை உறுதி செய்வதல்ல, ஆனால் மற்றவர்களும் உயர உதவும் வழிகளைத் தேடுவது, அவர்களையும் மரியாதைக்குரியவர்களாக்குவது. மற்றும் சமூகம் உலக வேலை செய்யும் வழியில் தவிர புனித விரக்தியை அமைககிறது என்று முக்கிய மூலப்பொருள் ஆகும். மற்றும் சமூகம் என்பது உலகம் வேலை செய்யும் வழியிலிருந்து பரிசுத்த உழைப்பை வேறுபட்ட முறையில் மாற்றி அமைக்கும் முக்கிய மூலப்பொருள் ஆகும். இது வாடிக்கையாளர்களைக் குறிவைப்பதை விட ஒத்துழைப்பு, கவனிப்பு மற்றும் உரையாடலை மையப்படுத்துவது போன்றது.


இது குழப்பமானதாக இருக்கலாம், ஆனால் சமூகம் எப்போதும் கடின உழைப்புக்கு மதிப்புள்ளது. தேவன் தனியாக வாழ்வதற்கு நம்மை உருவாக்கவில்லை, அது நமது வேலைக்கு பொருந்தும். நாம் போட்டியிடும் தன்மையை விட்டுவிட்டு ஒத்துழைப்பதைத் தொடங்கும் போது தேவனுடைய ராஜ்யத்திற்கு என்று நாம் மிகவும் அதிகமாக செய்ய முடியும்.


உரத்த குரலினைப் போலவே, உலகின் மதிப்புமிக்க கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவை நமக்கான தேவனுடைய திட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நம்மைச் பாதுகாப்பற்றவர்களாக உணரச்செய்கிறது. அதற்கு பதிலாக நாம் தேவனை ஒரு கைவினை குருவாக நம்புவதற்கு தேர்வு செய்வோம், எப்போது, எப்படி, ஏன், எந்த என்னும் நமது எல்லா துண்டுகளையும் ஏற்ற இடத்தில் அமைத்து அழகான மற்றும் பாதுகாப்பான ஒன்றை செய்ய நம்மை பயன்படுத்துவார்.


உங்கள் வாழ்க்கையை தேவனுடைய நோக்கம் கவர்ந்திழுக்கட்டும் மற்றும் கடினமாக உழைக்கவும், ஓய்வெடுக்கவும், பரிசுத்த உழைப்பின் வாழ்க்கையையும், நீங்கள் எங்கிருந்தாலும் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.


நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக கிரிஸ்டல் ஸ்டைன் மற்றும் ஹார்வெஸ்ட் ஹவுஸ் வெளியீட்டாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தகவல் அறிய https://www.harvesthousepublishers.com/books/holy-hustle-9780736972963 க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்