திட்ட விவரம்

பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்மாதிரி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

10 ல் 4 நாள்

உழைப்பைப் பற்றிய கண்ணோட்டத்தையும் அதற்கான ஒரு புதிய அணுகுமுறையையும், பின்பற்றுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் மாற்றமும், தேவன் நம் வாழ்க்கையில் செய்ய விரும்பும் புதிய விஷயங்களும் வரும்போது, ​ரண்டு தேர்வுகள் உள்ளன: பின்வாங்குவது அல்லது வளர்ச்சியைத் தொடருவது. தேவன் நமக்கான உந்துதலைக் காண்பிக்கும் வரை சில சமயங்களில் பின்வாங்குவது சிறந்தது என்று நான் முதலில் ஒப்புக்கொள்கிறேன். மாற்றம் பயமாக இருப்பதற்கான காரணம், ​​அதைச் செய்ய நான் எனது பலத்தை நம்பியிருப்பதே. அதைச் செயல்படுத்துவது, அதில் வெற்றி பெறுவது, நான் தோல்வியடையாமல் இருப்பது என எல்லவற்றிற்கும் நான் தான் பொறுப்பு என்று கருதுகிறேன். ​​என் முயற்சியில், என் விருப்பப்படி, எல்லாவற்றையும் நான் விரும்பும் வழியில் செயல்பட வைக்க முடியாது என்பதை நான் அறிந்ததினாலேயே, பின்வாங்கத் தேர்வுசெய்கிறேன்.


ஆனால் பின்னர் நான் நானாக முயற்சி செய்வதை நிறுத்திவிட்டு,தேவனை பின்தொடரத் தொடங்குகிறேன், தேவன் எனக்கு ஒரு புதிய விஷயத்தைக் கொண்டுவருகிறார் என்று நம்புகிறேன், ஏனென்றால் அவர் எனக்கு நல்ல திட்டங்கள், அவரை மகிமைப்படுத்தும் திட்டங்கள் மற்றும் அவருடைய ராஜ்யத்தை விரிவுபடுத்தும் திட்டங்கள் மட்டுமே வைத்திருக்கிறார்.


அவர் உங்களை வழிநடத்தும் புதிய பாதையில் நீங்கள் நடக்க தயாரா? அல்லது பின்வாங்கி, தெரிந்தவற்றின் வசதியை எடுத்துக்கொண்டு தெரியாத விஷயங்கள் நிறைந்த பருவங்களை விட்டுவிடுவீர்களா?


எதிர்காலத்தில் நாம் நம்பிக்கையுடன் எடுக்கக்கூடிய மூன்று உறுதிமொழிகள் இங்கே: தேவன் இன்னும் நம்மில் களைப்படையவில்லை, அவர் ஒரு புதிய காரியத்தைச் செய்யத் தயாராக இருக்கிறார், மேலும் ஒவ்வொரு அடியிலும் அவர் நம்முடன் இருக்கிறார்.


நம்முடைய ஆத்மாவுக்கு தேவன் ஒதுக்கும் பணிகளில் நம்முடைய எல்லா சக்தியுடனும் கடினமாக உழைக்க பரிசுத்த உழைப்பு நமக்கு சுதந்திரம் அளிக்கிறது. இது இதய வேலை, தேவனின் ராஜ்யத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் வேலை. மற்றவர்கள் செய்யும் வேலை அவர்களுக்கு சரியானது என்பதை அங்கீகரிக்க இது நமக்கு சுதந்திரத்தை அளிக்கிறது, ஆனால் அந்த சுதந்திரம் நம்முடைய வேலையைக் குறித்து சொல்ல நமக்கு அல்ல, அதும் இந்த பருவத்தில் அல்ல. முதலாளித்துவ உலகின் கர்ஜனைகளை மீறி தேவனின் சத்தத்தைக் கேட்க பரிசுத்த உழைப்பு நமக்கு உதவுகிறது, ஆகவே, தேவன் நம் இருதயங்களைத் ஆயத்தப்படுத்தியுள்ள வேலைக்கு ஆம் என்று சொல்லலாம், நம்முடைய ஆத்மாக்களை களைத்துப் போகச் செய்யும் வேலைகளுக்கு அல்ல.


உழைப்பு மற்றும் முயற்சி, ஓய்வு மற்றும் சோம்பல் ஆகியவற்றுக்கு இடையேயான கோடு, வாழ ஒரு நுட்பமான இடம். நாம் ஒரு வழியில் வெகுதூரம் சாய்ந்தால், நம்முடைய பலம் தேவன் என்னும் தேவனின் நினைவூட்டலை மறந்து அதில் நிலைத்திருப்பதற்குப் பதிலாக நம் பலத்தை நம்பியிருப்பதைக் காண்கிறோம். இந்நாட்களின் உழைப்பு என்பது அதிக நேரம் வேலை செய்ய அதிக நேரத்தை கண்டுபிடிப்பதைப் பற்றியது அல்ல, ஆனால் தேவன் என்ன செய்ய அழைக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதன் மூலம் சரியான இடங்களிலும் சரியான வழிகளிலும் நாம் அதிக சேவை செய்ய, அதிகமாகக் கொடுக்க, மேலும் ஊக்குவிக்க முற்படுவதே ஆகும்.


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக கிரிஸ்டல் ஸ்டைன் மற்றும் ஹார்வெஸ்ட் ஹவுஸ் வெளியீட்டாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தகவல் அறிய https://www.harvesthousepublishers.com/books/holy-hustle-9780736972963 க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்