திட்ட விவரம்

பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்மாதிரி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

10 ல் 10 நாள்

ஓய்வு எனக்கு கடினமனது, ஏனென்றால் என் இயல்பான விருப்பம் கடினமாக உழைப்பது. இதை நான் புரிந்து கொள்ள, எனக்கு உள்ளே ஆழமாக புதைந்திருந்த என் குறைபாடுகளுடன் நான் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறேன் , நான் வேலை செய்யவில்லை என்றால் நான் தோல்வியடைகிறது போலவும் நான் தோல்வியுற்றால், நான் பயனற்றவன் போலவும் உணர்ந்தேன். ஆனால் சற்று சிந்திக்கும் போது இதேபோல் நம் வேலையில் தேவனை சேவிக்க முடியும் என்று நான் நம்புகிறேன், நாம் ஓய்வெடுக்கும்போது அவரை கனப்படுத்துகிறோம் என்றும் நான் நம்புகிறேன்.


நாம் சற்று மெதுவாகச் செல்ல வேண்டும், தேவனுடைய வார்த்தையில் நமது நேரத்தைச் செலவிட வேண்டும், தேவனின் குரலைக் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருக்க வேண்டும், அப்போது அவர் நம்மை அழைக்கும் வேலையைச் செய்ய நாம் சிறந்தவர்களாக மாற்றப்படுகிறோம். நான் இடைவெளி இல்லாமல் 24/7 வேலை செய்ய முயற்சிக்கும்போது, ​​நான் தளர்ந்து , என் குடும்பத்தை புறக்கணித்து, என் உடல்நலத்தின் மோசமான பணியாளராக பணியாற்றுவது மட்டுமல்லாமல், நான் எனது நிகழ்ச்சி நிரல் மற்றும் என் கனவுகளின் அடிப்படையில் அவசர முடிவுகளை எடுக்க ஆரம்பிக்கிறேன். தேவனின் அமைதியான வழிகாட்டுதலை கேட்காமல் செயல் பட முட்படுகிறேன்.


சார்லஸ் ஸ்வைண்டால் இவ்வாறாக எழுதினார்: "தேவன் நம்மை என்றுமே, நமது சொந்த விதிமுறைகளினாலோ அல்லது நமது சொந்த வலிமையை நம்பி வாழவோ சொல்லவில்லை மற்றும் நமது நல்ல செயல்களின் மூலம் ஒரு சுவாரஸ்யமான தொகுப்பை சேர்ப்பதன் மூலம் அவருடைய ஆதரவை வெல்ல வேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. அதற்கு பதிலாக, அவர் தனது ஓய்விற்குள் சேர நம்மை அழைக்கிறார்."


தேவன் வேலை செய்தார், அது நல்லது என்று கண்டார், அவர் ஓய்வெடுத்தார், அது பரிசுத்தமானது என்று தீர்த்தார்.


நாம் தேவனுடைய ஓய்வில் அவருடன் சேர அழைக்கப்படுகிறோம், ஏனென்றால் அந்த தருணங்களில் தான் நமது சுமைகளை கீழே இறக்கி வைத்து விட்டு, அவருடன் இணங்குவோம், மற்றும் நம்மை உருவாக்கியதற்கான சித்தத்தைச் செய்யவும் மேலும் வரவிருக்கும் நாட்களுக்காகவும் நமது ஆத்மாவை புதுப்பிப்போம்.


நான் உங்களுக்காக ஒரு கட்டுக்கதையை விடுவிக்கட்டுமா? ஓய்வு அனைவருக்கும் வித்தியாசமாக இருக்கிறது. எனக்கு சில நண்பர்கள் உண்டு, அவர்கள் காலையின் ஒரு நீண்ட ஓட்டப்பயிற்சி மூலம் தங்கள் எண்ணங்கள், பிரார்த்தனை, மற்றும் நடைபாதையுடன் தனியாக இருப்பதால் உற்சாகமடைவார்கள். எனக்கு மற்றும் சில நண்பர்கள் உண்டு அவர்கள், நல்ல உணவு மற்றும் பெரிய உரையாடலுக்காக தங்கள் வீட்டிலேயே குடும்பத்துடன் நேரம் செலவிடுவதன் மூலம் புத்துணர்ச்சியடைவார்கள். மற்றும் நீங்கள் ஒரு புத்தகத்தை படிக்கும் போது, கலை, இசை அல்லது தோட்டக்கலையில் இடுபடும் போது நீங்கள் உங்கள் சிறந்த ஓய்வு நேரத்தில் இருப்பதாய் காணலாம்.


தேவன் நமக்கான தனிப்பட்ட வேலையைப் போலவே நம்முடைய ஓய்வும் இருக்க வேண்டும் என்று நம்மை சிறப்பாக சிருஷ்டித்தார்.



* * *


நீங்கள் இந்த தியானத்தை விரும்பினீர்கள் என்றால்பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்கிரிஸ்டல் ஸ்டைன் மூலம், உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தைத் தொடர பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்கள் என்றால், இப்பக்கத்தை அணுகவும் https://amzn.to/2I3ow1d.


நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக கிரிஸ்டல் ஸ்டைன் மற்றும் ஹார்வெஸ்ட் ஹவுஸ் வெளியீட்டாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தகவல் அறிய https://www.harvesthousepublishers.com/books/holy-hustle-9780736972963 க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்