திட்ட விவரம்

பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்மாதிரி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

10 ல் 6 நாள்

நீங்கள் மான்ஸ்டர்ஸ், இன்க்.,படம் பார்த்திருந்தால், நான் சென்ற பயணம் அந்த படத்தின் உச்சக்கட்ட காட்சியினைப் போல உணர்ந்ததாக நான் கூறும்போது என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியும். மைக், சல்லி மற்றும் பூ, ஆயிரக்கணக்கான கதவுகள் நிரப்பப்பட்ட கன்வேயர் பெல்ட்டில் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றில் எந்த கதவையும் அவர்களால் திறக்க முடியாது. தவறான கதவை தேர்வு செய்தால் அவர்கள் ஒரு பனிப்புயலிலோ அல்லது பாலைவனத்தின் வெப்பத்திலோ மாட்டிக்கொள்ள வைத்துவிடும். சரியானதைத் திறக்கும் போது அவர்களை அந்த கதவு, வீட்டிற்கு அழைத்துச் செல்லும். ஆகவே, அவர்கள் தங்கள் முழு பலத்தினாலும் தொங்கிக்கொண்டு, திசைதிருப்ப மற்றும் தங்களை அழிக்க முயன்ற எதிரிக்கு எதிராகப் போராடுகிறார்கள், அவர்கள் அறிந்த ஒரு
பாதுகாப்பின் கதவை அவர்கள் அடையும் வரை போரடுகிறார்கள்.


உலகெங்கிலும் உள்ள மற்றவர்களுக்காக தேவன் திறக்கும் கதவுகளைக் காணும் திறனை இணையம் நமக்குத் தருகிறது, மேலும் விசுவாசத்தில் நாம் காலடி எடுத்து வைக்க தேவன் விரும்பும் ஒரு கதவை நாம் பார்க்க தவறி விடகிறோம். எல்லா கதவும் நமக்கு பொருந்தாது. எல்லா கதகளும் நம்மை வீட்டிற்கு அழைத்துச் செல்வதில்லை.


நான் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு இறுக்கமான பிடிப்பு உயிர்வாழும் பயன்முறையில் செலவிட்டேன்-நான் கல்லூரியில் பட்டம் பெற்றப்பின், ஒரு வேலையில் சேர்ந்தேன், பின் திருமணம் செய்துகொண்டேன், உலகின் கடின உழைப்பு வரையறையின் உயர் அழுத்த பதிப்பின் கீழ் செயல்பட்டேன், வேலையில் இருந்து பணி நீக்கம் செயப்பட்டேன், அடுத்து என்ன செய்வது என தேட முற்பட்டேன், எனது சொந்தத் தொழிலைத் தொடங்கினேன், தீவிரமான, அற்புதமான மற்றும் தனிமையாக இருந்த ஒரு அமைச்சக நிலைக்கு ஆம் என்று சொன்னேன், பின் ராஜினாமா செய்தேன், எனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக ஒரு தன்னக வணிகத்தைத் தொடங்க மீண்டும் முற்பட்டேன்.


பெரும்பாலான நேரங்களில் நான் மூடியிருக்கும் கதவுகளால் பாதிக்கப்படாமல் இருக்க நிறைய நேரம் செலவிட்டேன், ஆனால் தேவன் அந்த நேரத்தில் என் பாதையில் வைத்திருந்த திறந்த கதவுகளைக் காணத் தவரிவிட்டேன்.


விருப்பங்களின் கன்வேயர் பெல்ட்டை விட்டுவிடுவதையும், பாடுபடவதிலிருந்து பின்வாங்கவும் நான் கற்றுக் கொள்ளத் தொடங்கியதும், எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள ஒரு யோசனையை தேவன் எனக்குக் தந்தார். எனக்கு நல்லதாக இருக்கும் கதவுகளை நான் தேடிக்கொண்டிருந்தேன், எனது திறமைகளின் சிறந்த பயன்பாடு, “பெரிய மற்றும் சிறந்த” வழிக்கு வழிவகுக்கும் சுவாரஸ்யமான கதவுகள்.


சுயநல முயற்சியின் அந்த பருவங்களில், நான் எனக்காகவே உழைத்த்துக்கொண்டிருந்தேன், ஆனால் தேவனோ உண்மையுள்ளவராக என்னுள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள், நாம் பெறும் திறன்கள், நாம் சந்திக்கும் நபர்கள் மற்றும் நாம் அனுபவிக்கும் வளர்ச்சி அனைத்தும் ஆசீர்வாதங்களாக இருக்கலாம். மறுபுறம் தேவனின் விருப்பத்திற்கு வெளியே நாம் இருப்போம் என்று கவலைப்படாமல் நாம் செல்லும் கதவுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை தேவன் நமக்கு வழங்கியுள்ளார். நாம் சரியான தொழிலினை தேர்வு செய்யாமல் இருந்திருக்கலாம், அல்லது நம்முடைய அழைப்போடு ஒத்துப்போவதாக உணரும் வேலையைச் செய்யாமலும் இருக்கலாம், ஆனாலும் தேவன்அங்கு நம்மைச் சந்திப்பார்.


நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Holy Hustle: Embrace A Work-Hard, Rest-Well Life

சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக கிரிஸ்டல் ஸ்டைன் மற்றும் ஹார்வெஸ்ட் ஹவுஸ் வெளியீட்டாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் தகவல் அறிய https://www.harvesthousepublishers.com/books/holy-hustle-9780736972963 க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்