இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

அழுகின்ற தீர்க்கதரிசி என்ற பட்டப்பெயர் எரேமியாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு மாபெரும் பட்டம் அல்ல. ஆனால் அது ஒரு உணர்வுப்பூர்வமான பெயராகும். ஏனென்றால் அவர் தனது அழைப்புக்கு உண்மையுள்ளவராக இருந்தார். அதை மிகவும் கவனமாகவும் மனதுருக்கத்துடனும் செய்து வந்தார். தனது மக்களுக்காக அவர்களது பாவத்துக்காக,கடவுளிடம் இருந்து விலகியதற்காக அவர் துக்கப்பட்டார். கடவுள் அவரது வாயில் வைக்கும் வார்த்தைகளைப் பேச வேண்டும் என்றார் கடவுள். அதை அவர் உடைந்த இருதயத்துடன் உண்மையாக நிறைவேற்றினார். எரேமியா புலம்பல் என்னும் புத்தகத்தையும் எழுதினார். இந்த கவிதைப் புத்தகமானது ஒரே உண்மையான கடவுளின் உடைந்த மனதையும் அவரது துக்கத்தையும் வெளிப்படுத்தியது.
கடவுளை நம்பி அவருக்காகவே வாழ்கிறவர்களாக,புலம்பலைக் கற்றுக் கொள்வது நமக்கு அவசியமானதாகும். புலம்பல் என்பது குறை சொல்வதல்ல,வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நம்மைப் படைத்தவருக்கு முன்பாக துக்கப்படுவதற்கு உங்களை ஒப்புக் கொடுப்பதாகும். கடவுளின் பிரசன்னத்தில் நம்மை நாமே தொலைத்துப் போடுவது போன்றதாகும். அதன் மூலமாக அவர் உங்களைக் குறித்து என்ன விருப்பம் வைத்திருக்கிறாரோ அந்த முறையில் வாழப் புதுப்பிக்கப்பட அனுமதிப்பது ஆகும்.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
என் வாழ்வில் இன்னும் சரிசெய்யப்படாமல் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் துக்கம் ஏதாவது உண்டா?
தாங்க முடியாத அளவுக்கு என்னை பாரப்படுத்துபவைகள் என்னிடம் உண்டா?
கடவுளிடம் நான் என்னை முழுமையாகத் திறந்து அவர் முன்பாக புலம்ப முடியுமா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மேடைகள் vs தூண்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருடைய கணக்கு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
