இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

எலியா ஒரு மாபெரும் மனிதர். அவர் மிகவும் மதிப்புமிக்க தீர்க்கதரிசி ஆவார். மிகவும் தீய,அநியாயமான ஜோடியான ஆட்சியாளர்களுக்கு முன்பாக அவர் தனியாக எதிர்த்து நின்றார். மோதலுக்கு அழைத்தார். அவர் மனம் கடினமாகிப் போன மக்களிடம் கடவுளின் உண்மையைப் பேசினார். யாரும் அவரைக் கவனிக்கவில்லை என்றாலும் தன் நிலையை விட்டு அவர் நகரவில்லை. அவர் பார்பதற்கு முரட்டுத்தனமானவராக இருந்த அவர் கூட ஒரு சூழலில் தளர்ந்து போய்விட்டார். பாகாலின் தீர்க்கதரிசிகளிடம் கர்மேல் மலையில் அவர் பெற்ற வெற்றியின் மூலமாக அவர் உற்சாகமடைந்து இன்னும் மேன்மையானவற்றை செய்திருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக,அரசி யேசபேலின் மரண மிரட்டல்களைக் கேட்டதும் மனம் சோர்ந்து ஒளிந்து கொண்டார். கடவுள் அவரை ஓடச் சொல்லியோ ஒளியச் சொல்லியோ ஒன்றும் சொல்லாதிருந்தும் அவரே அதைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவரது அழிந்தேன் என்ற மனப்பான்மையில் குறுக்கிட்டார். தேவதூதனால் உணவு கொடுக்கப்பட்டு,இரண்டு நீண்ட தூங்கங்களை முடித்த பின்னர், கர்த்தருடைய மலையாகிய ஓரேப் மலையை நோக்கி 40 நாள் பயணம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டார். அங்கே கடவுள் அவரை சந்தித்தார். கட்டளைகளை மென்மையான குரலில் சொன்னார்.
இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கடவுள் கேட்டபோது எலியா ஒரு வசனத்தை வைத்திருந்தார். அவரது நேர்மையான சோகத்தையும்,சுயபரிதாபத்தையும் குறித்து கடவுள் பதிலளித்தார். புதிய தரிசனத்தையும்,வரையறுக்கப்பட்ட நோக்கத்தையும் சொன்னார். எலியா இரண்டு அரசர்களையும் ஒரு தீர்க்கதரிசியையும் அபிஷேகிக்க அனுப்பி வைக்கப்பட்டார். பாகாலுக்குத் தங்கள் முழங்கால்களை முடக்காத மீதமான மக்களும் இருக்கிறார்கள் என்பதையும் கடவுள் அவருக்கு வெளிப்படுத்தினார். சுருக்கமாகச் சொல்வதென்றால்,கடவுள் எலியாவுக்கு நம்பிக்கைக்கும் விட்டுவிடாமல் இருப்பதற்குமான காரணத்தைக் கொடுத்தார்.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
என் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று நான் சோர்ந்து போய் இருக்கிறேனா?
நான் விட்டுவிட்டுப் போக நினைத்த காலங்கள் உண்டா?
என்னைத் தொடர்ந்து செல்ல வைப்பது என்ன?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மேடைகள் vs தூண்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருடைய கணக்கு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
