இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 14 நாள்

இயேசுவும் அவரது தூரத்து உறவினரான யோவானும் அருட்பணியில் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களின் ஒருவரே மற்றவரைக் காட்டிலும் மேலான அருட்பணியைச் செய்தார். யோவான் இயேசுவை பரலோகத்தில் இருந்து வந்தவர் என்றும் அவர் பரலோகப் பிதாவின் வார்த்தைகளைப் பேசுகிறார் என்றும் கண்டு கொண்டார். யோவான் உலகத்தில் இருந்து வந்தவர்,அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியை அவர் முடித்தார். அது இயேசுவுக்கு முன்னோடியாக இருந்து,அவரை ஏற்றுக் கொள்ளும்படியாகமக்களின் இதயங்களை இயேசுவுக்கு நேராகத் திருப்புவது ஆகும். அவரது அருட்பணியில் மனம் திரும்பின,கடவுளின் அரசை அனுபவிக்க விருப்பமுள்ள மக்களுக்குத் திருமுழுக்கு கொடுப்பதும் அவரது பணியாக இருந்தது.

கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் திருமுழுக்கு என்பது அவசியமானது என்றாலும் (இயேசுவே திருமுழுக்கு பெறுவதைத் தேர்ந்தெடுத்தார் என்றால் நம்மால் அதை விட்டுவிட வாய்ப்புக்கள் இல்லை),அதைவிட அதிக முக்கியமானது மனந்திரும்புதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாழ்வுக்கான கனிகளைக் கொடுப்பது ஆகும். நாம் ஒருபோதும் பரிபூரணமானவர்களாக மாறப்போவதில்லை,ஆகவே மனம் திரும்புதல் என்பது தொடர்ந்து நடக்க வேண்டிய ஒரு செயலாகும். இயேசுவில் நாம் மன்னிப்பையும் மறுபடியும் கட்டப்படுவதையும் தொடர்ந்து அவரது ஆற்றலால் முன்னேறிச் செல்வதையும் நாம் கண்டுகொள்ளலாம். புதுப்பித்தல் என்பது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டியதாகும். நம்மை அவர் சரியென்று நினைக்கும் வகையில் சுத்தப்படுத்தி,நிறைத்து,பயன்படுத்துவதற்காக அவரிடம் நம் வாழ்வை கடவுளிடம் ஒவ்வொரு நாளும் மறுபடியும் அர்ப்பணிப்பது தேவையாகும்.

நம்மை மனந்திரும்புதலுக்கும் புதுப்பித்தலுக்கும் அர்ப்பணிக்கும்போது நாம் படிப்படியாக கடவுளின் அரசில் நமது பணி என்ன என்பதைக் கண்டு கொள்வோம். முழுமையான அளவுக்கு நம் வாழ்க்கையும் அமையும்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
நான் மனம் திரும்ப வேண்டியது ஏதாவது இருக்கின்றதா?
புதுப்பித்தல் என்னும் தொடர் நிகழ்வுக்கு என்னை முழுமையாக அர்ப்பணிப்பதில் இருந்து என்னைத் தடுப்பது என்ன?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/