இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 13 நாள்

யோனா நம் எல்லோரையும் போன்ற ஒரு மனிதன் தான். அவர் கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதற்கு எதிரான திசையில் ஓடினார். அவரது வேலையானது மிகவும் பெரியதாகத் தெரிந்தது. ஆகவே தான் கடவுளை விட வேகமாக ஓடிவிடலாம் என்று நினைத்தார். இது எத்தனை நகைச்சுவை! சங்கீதம் 139:7-12 வசனங்களில் தாவீது நாம் எப்படி கடவுளைவிட்டு தப்பிச் செல்ல முடியாது என்று எழுதுகிறார். யோனா எப்படியோ சரியான வழிக்குக் கடவுளால் கொண்டுவரப்பட்டார். இறுதியில் நினிவேயின் மீட்பையும் கண்டார். மோசமான ஒரு நாட்டின் மேல் கடவுளின் கிருபையையும் நற்குணத்தையும் பற்றி புலம்புகிறார்,கோபப்படுகிறார். ஆனால் அவர் மீது கடவுள் காட்டிய கிருபையை மறந்துவிட்டார்.

நாம் எத்தனை அடிக்கடி இன்னொரு நபரைக் கண்டு,கடவுளுக்குப் பதிலாக அந்த நபரை ஒதுக்கி வைத்துவிடுகிறோம்?அவர்களது பாவங்கள் மிகவும் பெரியவை என்று நினைத்துக் கொள்கிறோம். அவர்கள் வாழ்க்கை மிகவும் அசிங்கமானது,அவர்களது தேர்ந்தெடுப்புகள் பரிதாபமானது என்று நினைக்கிறோம். கடவுளால் இடைபட்டு அவற்றை மாற்ற முடியாது என்று கூட நினைக்கிறோம். கணக்கில் அடங்காத நம் பாவங்களையும் குறைகளையும் மன்னித்த கடவுளின் கிருபையை மறந்துவிடுகிறோம்.கிருபையும்,இரக்கமும்,கனிவும் அதிகம் தேவைப்படும் மக்களிடம் இருந்து அவற்றை மறைத்துவிடுகிறோம். நமது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அவர் மீது வைக்கும்போது இயேசுவில்,கிருபையானது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நாம் சம்பாதிக்கவும் இல்லை,அதற்கு நாம் தகுதியானவர்களும் இல்லை. அது இலவசமான ஈவு. அதை முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
என்னிடமிருந்தே என்னைக் கடவுள் எபடி பாதுகாத்தார் என்பதை நான் மறந்துவிட்டேனா?
யாருக்கு நான் கிருபையையும் இரக்கத்தையும் காட்டாமல் வைத்திருக்கிறேன்?
இதற்காக நான் மனம் வருந்தி மக்களை மீண்டும் புதிதாக நேசிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் முடியுமா?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/