இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 11 நாள்

கடவுள் எசேக்கியேலை இஸ்ரவேலருக்கு ஒரு காவல்காரனாக அழைத்தார். இனி வரப்போகின்றவற்றைக் கண்டு உண்மையாக அவற்றை மக்களிடம் சொல்வதே அவரது பணி. அந்தப் பணியானது மிகவும் கடினமானது. ஏனென்றால் தனது சொந்த மக்களிடம் பேசுவது மிகவும் பயப்படச் செய்வதாக இருக்கும். அவர்கள் கீழ்ப்படியாதவர்களும் உருவ வணக்கம் செய்பவர்களுமாக இருக்கும்போது அது இன்னும் சூழ்நிலையை மோசமானதாக்கும். ஆனாலும் எசேக்கியேல் பொறுமையாக நன்மையானவைகளையும் தீமையானவைகளையும் மக்களுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தார்.

இந்தப் புத்தகத்தில் திரும்பத்திரும்ப வரும் கருத்தானது கடவுளின் மகிமை என்பதாகும். எதிரி நாட்டினரால் இஸ்ரவேலர் அடிமைகளாக பிடித்துச் செல்லப்படும்போது, இஸ்ரவேலரின் மகிமையானது ஒரு நாடு என்ற முறையில் காணாமல் போனது. அல்லது அப்படி ஆனது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனாலும் கடவுள் தனது தீர்க்கதரிசிகள் மூலமாக அவரே இஸ்ரவேலின் மகிமை என்று வெளிப்படுத்தினார். சிறைப்பிடிக்கப்பட்டுப் போன கடினமான காலங்களிலும் பாடுகள்,நட்டங்கள் வந்த நிலையிலும் கூட,கடவுள் அவர்களுடன் இருந்தார். அவர் ஒருபோதும் அவர்களை விட்டு விலகவில்லை. தன்னைவிட்டு விலகிப் போன மக்கள் மீது அவர் துக்கமாக இருந்தார். தனது மாபெரும் அன்பினால் அவர்களை அவர் ஒழுங்குபடுத்தினார். கடவுளின் மகிமையானது உலகத்தையும் அவரை நேசித்துப் பின்பற்றுகிறவர்களையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது. நம் மேல் அமர்ந்திருக்கிறது. ஆன்மாவின் மிகக் கருமையான காலங்களிலும் கூட,அவரது மகிமையானது நம் வாழ்வில் குறைந்து போகாமல் இருக்கின்றது. நாம் அவர் இருப்பதை உணர்ந்தவர்களாக அவரை நேசிப்பதற்கு நம்மை அர்ப்பணித்தால் இது நடக்கும்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
என்னைச் சுற்றியிருக்கும் இயற்கையில் கடவுளின் மகிமையைக் கண்டு அனுபவிக்க முடிகிறதா?
இந்த ஆண்டில் கடவுளின் மகிமை என் வாழ்வில் எந்த இடத்தில் வெளிப்படையாகத் தெரிந்திருக்கிறது?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/