இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

பணக்காரர்களும் கடவுளின் அரசும் கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரு இரகசியமாக இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அனைத்துப் பொருட்களின் பின்னணியில் அவர்களுக்கு கடவுளின் தலையீடோ,வழங்கலோ தேவையில்லை. இந்த உலகத்தின் தரத்தின்படி பணக்காரர்களாக இருப்பது என்பது கடவுளின் அரசில் செல்வந்தர்களாக இருப்பதுடன் சமமாக இருக்காது. அதாவது ஒவ்வொரு பணக்காரரும் அவர்களிடம் இருக்கும் அனைத்துமே கடவுளுடையது என்றும் அவர்கள் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கவே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளும் ஒரு இடத்துக்கு வரவேண்டும். நம்மிடம் இருப்பது அனைத்தும் கடவுளிடம் இருந்து வந்திருப்பவை. நமது செல்வத்தை வளர்க்கச் செய்யும் திறனும் கூட அவரிடம் இருந்து வந்ததே. சம்பாதிபதும் அவற்றை சேர்த்து வைப்பதும் கூட அவரிடம் இருந்து வரும் ஆசீர்வாதம் தான். நாம் கடவுளிடம் இருந்து செல்வத்தைப் பற்றிய நமது புரிதலைப் பிரித்து வைக்கும்போது தான் பிரச்சனை வருகிறது. சுயநலமான நோக்கம்,பேராசை,பதுக்கி வைத்தல்,பெருமை போன்றவை இங்கே நுழையக்கூடிய சில பாவங்கள் ஆகும்.
பணம் மோசமானது என்று இயேசு ஒருபோதும் சொன்னதில்லை. பண ஆசைதான் தீமைக்கு வேராக இருக்கிறது என்றார். உலகத்தில் அல்ல பரலோகத்தில் செல்வங்களை சேர்த்து வைத்தல் என்ற தலைப்பிலேயே அவர் அதிகம் போதித்திருக்கிறார். இதைச் செய்வதற்கான ஒரு வழியானது,நமக்கு ஆசீர்வாதமாகக் கிடைத்தவற்றைக் கொண்டு தாராள மனதுடன் இருப்பதை வேண்டுமென்றே செய்வதாகும். தேவை உள்ளவர்களும்,வசதி இல்லாதவர்களும் நம்மைச் சுற்றி இருக்கின்றார்கள்.அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் நேரம் வந்திருக்கிறது.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
நான் என்னை உலகத்தின் தரத்திலா அல்லது கடவுளின் அரசின் தரத்திலா எதில் பணக்காரனாக நினைக்கிறேன்?
இன்று நான் யாரை ஆசீர்வதிக்கலாம்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மேடைகள் vs தூண்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருடைய கணக்கு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
