இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

சில நேரங்களில் சுகமாகுதல் ஒரே இரவில் நடந்துவிடுகிறது. சில நேரங்கள் சில மாதங்கள் அல்லது வருடங்களில் படிப்படியாக நடைபெறுகிறது. நம்மை சுகமாக்குகிற கடவுள் எதைச் செய்ய வேண்டும். எப்போது,எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிந்து ஒரு சர்வ வல்லவர். அவரது கையைத் திருக்கி நமது சுகமாக்குதலை வாங்க முடியாது என்றாலும் நமது அற்புதத்துக்காக நாம் பொறுமையாக எதிர்பார்ப்புடன் காத்திருக்கலாம். எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் மாற்றக்கூடியது,ஏனென்றால் அது நம் வாழ்வில் கடவுளின் சித்தத்தைச் செய்வதற்கு எதையும் செய்யும் என்று அவருக்கு அழைப்பு விடுப்பது ஆகும்.இயேசு இந்த மனிதனை முழுமையாக ஒரே நேரத்தில் சுகப்படுத்தியிருக்க முடியும். ஆனால் இரண்டு படிகளில் அதைச் செய்வதைத் தேர்ந்தெடுத்தார். அவர் அந்த மனிதனையும் அந்த சுகமாக்குதலில் ஈடுபடுத்தினார். எதையாவது பார்க்கிறாயா என்று கேட்டார். அந்த மனிதன் பாதி சரியான தனது நிலையை நேர்மையாகச் சொன்னார். ஆகவே இயேசு தான் துவங்கியதை நிறைவேற்றி அந்த மனிதனுக்கு முழுமையான பார்வையைக் கொடுத்தார். இப்போது நான் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்கிறேன் என்றார். இயேசுவும் நாம் நமது சொந்த அற்புதத்தில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறார். படைத்துக் காப்பவருடன் கூட்டணி அமைப்பது என்பது அவரது அரசை இந்த உலகத்தில் வரக் காண்பது ஆகும். நாம் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
கடவுள் உங்களை எப்படி உங்கள் அற்புதத்தில் ஈடுபடுத்தினார்?
எங்கே உங்களுக்கு பகுதியான சுகம் அல்லாமல் முழுமையான சுகம் தேவையாக இருக்கிறது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருடைய கணக்கு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

வனாந்தர அதிசயம்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

மேடைகள் vs தூண்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது
