இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 16 நாள்

யூத சட்டத்தின்படி தொழுநோயாளிகள் தீட்டு உள்ளவர்கள் என்று கருதப்பட்டனர். அவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். ஊர்களுக்கு வெளியே தான் அவர்களுக்கான வசிப்பிடமும் இருந்தது.மற்ற மக்கள் அருகே வரும்போது அவர்கள், “தீட்டு,தீட்டு”என்று கத்தி அவர்களை எச்சரிக்க வேண்டும். இது எத்தனை மோசமான வாழ்க்கை! ஆனால் இயேசு உலகத்துக்கு வந்து தனது அருட்பணியைத் துவங்கியபோது,அவர் தொழுநோயாளிகளைக் கண்டுகொண்டது மட்டுமல்ல அவர்களைத் தொட்டு அவர்களுக்கு சுகத்தையும் கொடுத்தார். ஆம்,அவர் அவர்களைத் தொட்டார். அவர்களுக்கு திறந்ததும்,நீர் வடிகிறதுமான புண்கள் இருக்கும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. தொற்று நோயாக இருக்குமோ என்று அவர் நினைக்கவில்லை. மனதுருக்கத்துடனும் உண்மை அன்புடனும் அவர் அவர்களைத் தொட்டார். உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்கும் என்று தயக்கத்துடன் சொன்ன தொழுநோயாளியிடம் எனக்கு சித்தம் உண்டு என்று பதிலளித்தார் இயேசு.

நமது தீட்டுக்கள்,எப்படிப்பட்டவைகளாக இருந்தாலும்,இயேசுவைத் தடுக்காது. நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை சந்திக்க அவர் அதிக ஆவலுடன் இருக்கிறார். உங்களது உடைந்த,ஒழுகுகின்ற,நாற்றமடிக்கின்ற புண்களையும் கூட அவர் தொட்டு சுகமாக்கி மீண்டும் உங்களை முழுமையான நிலைக்குக் கொண்டுவருகிறார். உங்களை அவரிடம் திறந்து காட்டும் அளவுக்கு நீங்கள் உங்களைப் பலகீனமானவர்களாக்கினால் தான் இது நடைபெற முடியும்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
உங்களில் தீட்டுள்ள பாகம் என்று நீங்கள் அறிந்திருக்கிற பகுதி ஏதாவது உண்டா?
இயேசுவை அழைத்து உங்கள் வேதனையில் அவரையும் பங்கேற்க வைப்பீர்களா?
உங்கள் வாழ்வின் தொடமுடியாத பகுதிகளைத் தொட இயேசுவை அனுமதிப்பீர்களா?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/