இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 17 நாள்

ரோம நூற்றுக்கு அதிபதி மனிதத் தரத்தில் பெரும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அவருக்கு வேலைக்காரர்கள் இருந்தனர்,அவர் தலைமை தாங்கிய ஒரு கூட்ட போர்வீரர்கள் அவர் அதிகாரத்தின் கீழ் இருந்தார்கள். இந்த நூற்றுக்கு அதிபதி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஆவார். ஏனென்றால் இவர் தனது வேலைக்காரன் ஒருவரது தேவைக்காக மனதுருக்கத்தைக் காட்டினார். தனது குடும்ப உறுப்பினருக்காக அல்ல,ஒரு வேலைக்காரனுக்காக அவர் இயேசுவை அணுகினார். மேலும்,அவர் இயற்கையின் மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் இருந்த இயேசுவின் வல்லமையையும் அதிகாரத்தையும் புரிந்திருந்தார். ஆகவே தான் அவர் “ஒரு வார்த்தை சொல்லும்”என்று இயேசுவிடம் கேட்டார். அவர் சொல்லும் வார்த்தை தன் வேலைக்காரனை குணமாக்கும் என்று அவர் நம்பினார். அவரது விசுவாசத்தை இயேசு பாராட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு யூதரல்லாத புறஜாதியார். இயேசுவின் வார்த்தையை அப்படியே நம்பிச் சென்ற முதல் புறஜாதியானவர் அவராகத் தான் இருக்கும்.

இயேசு என்ற பெயர் எத்தனை வல்லமையுள்ளது என்பதை நாம் அடிக்கடி மறந்து போகிறோம். காணப்படுகிறதும் காணப்படாததுமான உலகங்களில் அவருக்கு இருக்கும் அதிகாரத்தை நாம் மறந்து போகிறோம். நாம் பயத்துடனும் அவர் எத்தனை வல்லமையுள்ளவர் என்பதை மறந்தும் வாழ்கிறோம்.அடிக்கடி நாம் ராஜாதி ராஜாவுக்குக் கொடுப்பதைவிட பிசாசுக்கு அதிக மதிப்பையும் நேரத்தையும் கொடுத்துவிடுகிறோம். அதை மாற்றுவதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது!

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
எனக்காகக் கடவுள் வைத்திருக்கும் திட்டங்களைவிட என் வாழ்வில் பிசாசின் ஈடுபாடைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துகிறேனா?
காணப்படுகிறதும் காணப்படாததுமான உலகங்களில் இயேசுவுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பற்றிய அறிவுடன் நான் எப்படி தைரியமாக வாழ முடியும்?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/