இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 15 நாள்

வேதாகமம் உலகத்தரம் வாய்ந்த சில உரையாடல்களைப் பதிவு செய்திருக்கிறது. அவற்றில் ஒன்று,சாத்தானுக்கும் இயேசுவுக்கும் வனாந்தரத்தில் நடந்தது ஆகும். இயேசு நாற்பது நாட்கள் உபவாசம் இருந்திருக்கிறார். பின்னர் பரிசுத்த ஆவியானவரால் வனாந்தரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த பரிதாபமான சூழ்நிலையில் சாத்தான் காட்சி கொடுத்து தேவ குமாரனை கிண்டல் செய்து தூண்டுகிறான். முதலாவதாக அவரது பசியைப் பற்றி பேசுகிறான். ஒரு மட்டரகமான மந்திரத்தைச் செய்து கல்லுகளை அப்பங்களாக்கச் சொல்கிறான். பின்னர் உயரமான கட்டிடத்தில் இருந்து தன்னை விழச் செய்து பெரும் சாகசத்தைச் செய்யத் தூண்டுகிறான். இறுதியாக தன்னை வணங்கினால் உலகத்தின் நாடுகளை ஆட்சி செய்யும் வாய்ப்பைக் கொடுப்பதாகச் சொல்கிறான். இயேசு தனது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அதாவது மாம்சமான வார்த்தையானவர்,எழுதப்பட்ட கடவுளின் வார்த்தையைப் பயன்படுத்தி தன் எதிரியைப் பின்னே தள்ளினார்.

கடவுள் ஒருபோதும் நம்மை சோதிக்கிறவர் அல்ல. ஆனால் அவர் நமது விசுவாசத்தின் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்க அனுமதி கொடுப்பார். அவரது வார்த்தை என்னும் அஸ்திபாரத்தில் நம் உறுதியான விதிகள் இருக்கின்றனவா என்பதையும் வெளிப்படச் செய்வார். அவரது வார்த்தையை நாம் அறியாமல் இருந்தால்,எதிரியுடன் நாம் எப்படி போரிட முடியும்?அவனது பொய்களை நாம் எப்படி களையெடுக்க முடியும்?கடவுளின் வார்த்தை ஆழமாக நம் இதயங்களில் பதியாமல் தீமையால் திக்குமுக்காடி நாம் யார் கட்சியில் இருக்கிறோம் என்பதையே மறந்துபோய்விடுவோம். இயேசு பாவத்தையும் மரணத்தையும் வெற்றி கொண்டு உன்னதமான வெற்றியை அடைந்ததால் நாம் வெற்றியாளர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இயேசுவில் நாம் வெற்றியாளர்களுக்கும் மேலானவர்கள். நாம் சாத்தானின் திட்டங்களுக்கும் சதிகளுக்கும் மேலாக வெற்றியாளர்களாக இருப்போம்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
எதிரி என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கிறானா?
எனக்கு தோல்வி மனப்பான்மை இருக்கிறதா அல்லது வெற்றி மனப்பான்மை இருக்கிறதா?
அவனைத் தோற்கடிக்க நான் எந்த வேத வசனத்தைக் கவனிக்க வேண்டும்?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/