இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

உங்களைக் கடவுளின் பிரசன்னத்துக்குள் தூக்கிச் செல்லும் நண்பர்களே நீங்கள் பிடித்துக் கொண்டிருக்கவேண்டிய நண்பர்கள் ஆவார்கள். வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவரை இவர்கள் இயேசுவிடம் தூக்கி வந்தார்கள். இயேசு உண்மைத்தன்மையுடன், “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன”என்றார். உண்மையிலேயே இந்த நிகழ்ச்சி இயேசு தேவதூஷணம் சொல்கிறார் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களைத் தூண்டியது. ஆனால் உண்மையிலேயே கடவுள் மட்டுமே செய்யக்கூடிய செயலை அவர் செய்தார். இயேசு அவர்களது எண்ணங்களை அறிந்து அதற்கு ஏற்ப பதில் சொன்னது மிகவும் ஆச்சரியமானதாகும்.
நாம் எத்தனை தடவைகள் சரியானவற்றை சொல்லியிருக்கிறோம்,ஆனால் நம் சிந்தனைகள் கசப்பு,குற்றம் தீர்த்தல் மற்றும் பொறாமையுடன் இருந்திருக்கின்றன?நமது சிந்தனைகளுக்குக் கூட கடவுளுக்கு கணக்குக் கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் உள்ளே இருப்பது தான் இறுதியில் வெளியே ததும்பி வரும். அவை உங்களைச் சுற்றி குழப்பத்தையோ அல்லது சமாதானத்தையோ கொண்டுவரலாம்.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
என் நண்பர்களைக் கடவுளின் சிங்காசனத்தின் அருகே ஜெபத்தில் அழைத்துச் செல்கிறேனா?
என்னில் கடவுள் மாற்ற விரும்புகிற அடிக்கடி என்னில் உருவாகின்ற எண்ணம் அல்லது எண்ணங்கள் உண்டா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மேடைகள் vs தூண்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

வனாந்தர அதிசயம்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருடைய கணக்கு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
