இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசுவுடன் முகமுகமாக

40 ல் 18 நாள்

நியாயப்பிரமாணத்தைக் கற்றுக் கொடுப்பதுடன் அதைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவந்த வேதபாரகன் ஆகிய மதத்தலைவர் ஒருவர் இயேசுவை சந்தித்த்தார். இயேசுவைப் பின்பற்றும் கருத்து அவருக்கு அருமையாக இருந்தது,ஆனால் அதற்கு அவர் கொடுக்க வேண்டிய விலைக்கிரயத்தைப் பற்றி புரிந்திருக்கவில்லை. தனக்கு தலைசாய்க்கக் கூட இடமில்லாத நிலை இருந்ததை இயேசு சொன்னார்,அதைப் புரிந்து கொள்ள உதவினார்.

சீடத்துவம் என்பது விலையேறப்பெற்றது. நம்மிடம் இருப்பவற்றை நாம் கடவுளுக்கு முன்பாக அர்ப்பணிக்க விரும்புவதற்கும் பல மடங்கு மேலான விலைக்கிரயமாகும் அது. இயேசு ஒருபோதும் யாரிடம் இருந்தும் அர்ப்பணிப்பை வற்புறுத்திக் கேட்டதில்லை. ஆனால் அவரைப் பின்பற்றும்போது அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நேரடியாகச் சொல்லியிருக்கிறார். அர்ப்பணிப்பு என்பது படிப்படியாக கட்டுப்படுத்தும் அதிகாரத்தை விட்டுவிட்டு கடவுளிடம் அதிகாரத்தைக் கொடுப்பதாகும். கடவுள் நம்மைப் பார்த்துக் கொள்வார்,நாம் நம்மைப் பார்த்துக் கொள்வதைவிட பலமடங்கு மேலாக நம்மைக் கவனித்துக் கொள்வார்.

வசதி,ஆடம்பரம்,செழிப்பு ஆகியவற்றுக்கான தேவைகளைக் கொடுத்துவிட்டு,தியாகம்,தன்னலமின்மை போன்றவற்றை ஏற்றுக் கொள்ள நாம் ஆயத்தமாக இருந்தால் அதுவே நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கும் உலகத்துக்கு நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டும்.

உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
எனது வசதியை விட்டுக் கொடுக்க நான் எந்த அளவுக்கு ஆயத்தமாக இருக்கிறேன்?
என் வாழ்வின் எந்தப் பகுதிகளை நான் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டியதாக இருக்கிறது?

இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவுடன் முகமுகமாக

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/