நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 13 நாள்

"நாள் 13: இகழ்ச்சி"

தாவீது தன் கஷ்டங்களில் முங்கிக்கொண்டிருக்கிறார் *(வசனம் 1-3). அவர் தனிமையில் வலியில் கதறுகிறார். அவருடைய சத்துக்களினால் (வசனம் 4) நண்பர்கள் குடும்பத்தினால் (வசனம் 8) தள்ளப்பட்டிருந்தார். அவருடைய நற்பெயர் கெடுக்கப்படும் நிலையில் இருந்தது. ஒரு வெற்றியாளனாக போற்றப்பட்டவர் இப்போது எங்கும் இகழப்பட்டார் (வசனம் 12). இஸ்ரவேலின் இரட்சகர் தன் இரட்சிப்பிற்காக கெஞ்சுகிறார் ஆனால் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை (வசனம் 3).

நம்முடைய நற்பெயர் கலங்க படும்போது நாம் உணரும் வலி மிக அதிகமானது. நாம் குடும்ப பெயர்கள் போற்றப்படும் சூழலில் இருந்து வந்தாலும் நமக்கென்று பெயரை கொண்டிருக்க விரும்பினாலும், நம்முடைய நற்பெயர் நமது அடையாளம். அதை கெடுத்தால் நமக்கு முழுவதும் உடைந்துபோகும் நிலைக்குள்ளாக வருகிறது. நம்முடைய நற்பெயர் களங்கப்படும்போது நாம் எதிர்வினையாற்ற எவ்வளவு சோதிக்கப்படுவோம்? நம்முடைய தவறுகளை மறைக்கிறோமா? சோகத்திற்குள்ளாகிறோமா? பரிபூரணத்தை நாடி நம்மையும் (மற்றவர்களையும்) குழப்புகிறோமா? தாவீது மற்றொரு வழியில் செல்கிறவராக இருக்கிறார்.

சோகத்திலும், தாவீதின் மனது அவரின் மீது இல்லை. அவருடைய சொந்த கணத்தில் நிறைந்தவராக இல்லை. தேவனுடைய வீட்டின் மீதே அவரின் வைராக்கியம் இருந்தது. அவரை அதுவே நிரப்பியது (வசனம் 9). உண்மையாக தன் தவறுகளை ஒப்புக்கொண்டு, இஸ்ரவேலின் தேவனின் நற்பெயருக்கு எந்த களங்கமும் தன் தோல்வியினால் வந்துவிடக்கூடாது என்று ஜெபிக்கிறார் (வசனம் 5-6). தாவீது நீதியான எல்லாம் அறிந்த தேவனின்மீது தன் உண்மையான அன்பை வைத்து தன் மன்றாட்டை வைக்கிறார் (வசனம் 13). தேவனுடைய நற்பெயரில் தன்னை நிலைநிறுத்துகிறார்.

அநேக ஆண்டுகள் கழித்து, தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டவர் பஸ்காவின்போது எருசலேமுக்கு உள் வந்தார், வியாபாரிகளையும் பணம் வாங்கினவர்களையும் துரத்திவிட்டார். சீஷர்கள் நினைவுகூர்ந்தார் "உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது" (யோவான் 2:17). இந்த நிகழ்வு மனித மரியாதையின் மிகப்பெரிய இழப்பை உண்டுபண்ணியது. இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர், சிலுவையில் ஒரு குற்றவாளியாக கேவலப்படுத்தப்பட்டார், தன் விரோதிகளுக்காக ஜெபித்தார், தன்னுடைய நற்பெயரில் எல்லா நன்மையைகளையும் அவர்கள் பெற்றுக்கொள்ளும்படியாக. இயேசுவில், கறைபடுத்த படமுடியாத நித்திய நற்பெயரை நாம் பெறுகிறோம்.

ஜெபம்

தேவனாகிய இயேசு கிறிஸ்து, தாவீதின் குமாரன், தேவ குமாரனே, எங்களுக்கு நற்பெயரை உண்டுபண்ண அநேக முயற்சி செய்திருக்கிறோம் என்று அரிக்கிற் இடுகிறோம். நீர் எங்களுக்கு தந்த பெயருக்கு குறைவான மதிப்பையே கொடுத்திருக்கிறோம். எல்லா நாமங்களுக்கும் மேலான நாமம் ஆகிய நீர் உம்மை நற்பெயர் அற்றவராக செய்தீர். உம்மை தாழ்த்தினீர், அடிமையின் ரூபம் எடுத்தீர். உம்முடைய ஆவியானவரினாலும் வார்த்தையினாலும் உம்முடைய குணத்தை வெளிப்படுத்த உதவும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.