நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 11 நாள்

"நாள் 11: குமாரன்"

லெந்து நாட்கள் மனந்திரும்புதல் மற்றும் தாழ்மையின் நாட்களாக இருக்கின்றன. தேவனுடைய மகிமையின் வெளிச்சத்தில் நம்முடைய பாவ நிலையையும் அழிந்துபோகும் தன்மையையும் நினைவுகூர வைக்கின்ற நாட்கள் இவை. சங்கீதம் 2 "ராஜரீக சங்கீதங்களின்" துவக்கமாக இருக்கிறது. அந்த சங்கீதம் ஒரு கேள்வியோடு துவங்கி அதற்கான பதிலையும் நமக்கு தருகிறது. உண்மையான ராஜாக்கு எதிராக முரட்டாட்டமும் போரும் நடத்த முற்படும் தேசங்கள். "பரத்தில் அமர்ந்திருக்கிறவர்"-இன் பிரதிகிரியை நகைப்பாக இருக்கிறது, நகைக்கபட கூடாதவரின் பிரதிகிரியை அது.

அந்த பிரதிகிரியை நகைப்பு மாத்திரம் அல்ல, அது கிரியையும் கூட. தேவன் தன் குமாரனை, உண்மையான ராஜாவை, தாவீதின் சந்ததியில் வந்து காரியத்தை செய்யவிருந்தவரை குறிக்கிறார். எல்லாம் அவருடையது, எல்லா கள்ள ராஜாக்களின் மேலும் அவர் ராஜரீகம் விளங்கும். அவர் இந்த முரட்டாட்டம் பண்ணுகிறவர்களின் மனதை மூடத்தனமாகவும் அபாயமானதாகவும் விளக்குகிறது. அந்த குயவன் (ஏசாயா 45:9) அவர்கள் ஜீவியத்தை உடைந்த மண்பாண்டங்கள்போல உடைத்துப்போடுவார். அது கால்களால் மிதிக்கப்படும், பிரயோஜனம் அற்றதாக போகும் - குப்பை மேடாகும்.

இந்த சங்கீதம் நியாயத்தீர்ப்பை காட்டினாதானாலும், அது அதிக நம்பிக்கையை தருகிறது. உண்மையான நீதியான ராஜாவாக வந்த உண்மையான திவ்விய குமாரனை அது நமக்கு விளக்குகிறது. அவர் பிதாவின் சத்தத்திற்கு செவிகொடுத்து பாவத்தின் நுகத்தை உடைத்துப்போட்டார். கிறிஸ்து அவருடைய பூமியின் ஊழியத்தை முடிக்கமுடிந்ததினால் சொல்லமுடிந்தது, "எல்லா அதிகாரமும் புறத்திலும் பூமியிலும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது". (மத்தேயு 28:18). அவரே வேதம் அழைக்கும் " இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து" (எபிரேயர் 1:3)-இல் ஆக இருக்கிறார்.


ஜெபம்

எங்கள் ராஜாவும் பிதாவுமானவரே, நீர் இருக்கும் இடத்தில் மாட்சிமையும் பரிபூரணமும் விளங்கும். உம்முடைய குமாரனை தந்தமைக்காக நன்றி, அவர் உம்முடைய மகிமையை வெளிக்காட்டி எங்களுக்காக வழக்காடுகிறார், எங்களை எல்லா சத்தியத்திற்கும் நேராக வழிநடத்துகிறார். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.