நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 10: ராஜா"
இயேசுவைக்குறித்து மக்கள் அநேக விதங்களில் யோசிக்கிறார்கள். அநேகர் யோசிக்கும் 2 பொதுவான விதங்கள் அவர் ஞானமுள்ள போதகர் என்றோ அல்லது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றோ தான். ஆனால், இந்த வேத பகுதி, புதிய ஏற்பாட்டில் அதிக மேற்கோள் காட்டப்படும் பகுதி, இயேசுவின் இரண்டு முக்கிய பங்குகளை குறிக்கிறது - ஆசிரியர் மற்றும் ராஜா.
சங்கீதம் 110-இல் ராஜாவானவர் வல்லமையிலும் பராக்கிரமத்திலும் ஈடு இணையற்றவராக காட்சி படுத்தப்படுகிறார். அவர் தேவனின் வலது பாரிசத்தில் அமர்ந்து அதிக ஆளுமைகொண்ட இடத்தில் இருக்கிறார். அவருடைய எதிரிகளுக்குமுன் நிச்சய வெற்றியை பெருகிறவராகவும் மக்கள் அவரை தானாக முன்வந்து பின்பற்றும் நிலையிலும் இருக்கிறார். எதிர்க்கும் ராஜாக்களை நசுக்கிப்போடுகிறார் தேசங்களுக்கு நியாத்தீர்ப்பை கொண்டுவருகிறார். அவர் உயர்த்தப்பட்டு அவருடைய எதிரிகளின் மீதி நிச்சய வெற்றியை பெறுகிறார்.
இயேசு உயிர்த்தெழுந்து பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், தேவன் அவருடைய சொந்த இடமான தேவனுடைய வலது பாரிசத்தில் சேர்த்து கொண்டார். அவருடைய உயிர்த்தெழுதல் அவர் தேவ குமாரன் என்றும் சிருஷ்டிப்பிற்கு முன்னரே நிச்சயமான ராஜா என்ற ஆதாரத்தையும் வெளிக்காட்டியது. பாவம் மற்றும் மரணத்தின் வல்லமையை அவர் மேற்கொண்டு தேவனாக தற்போது வீற்றிருக்கிறார். இதற்கு அர்த்தம் இயேசு நம்மை எல்லா பொல்லாப்பு மற்றும் துன்மார்க்கத்திலிருந்தும் பாதுக்காக்க வல்லவர் என்றும் நம்முடைய பற்றிற்கும் விசுவாசத்திற்கும் உரியவரென்றும் சொல்கிறது.
இந்த சங்கீதம் இயேசு ஒரு ஆசாரிய ராஜா என்றும் சொல்கிறது. ஆசாரியர்கள் மக்களின் சார்பாக பலிகளையும் ஜெபங்களையும் ஏரெடுப்பார்கள். ஆனால் இயேசு நிரந்தர ஆசாரியனாக மெல்கிசேதேக்கின் வழிவந்த எல்லா ஆசாரியர்களுக்கும் மேலானவராகவும் இருக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக பரிபூரண பலியாகவும் நமக்கு தொடர்ந்து பரிந்துபேசுகிறவருமாக இயேசு இருக்கிறார். நம்மை பரிசுத்த ஆடைகளை கொண்டு தரிப்பித்து, அதன்மூலம் தேவன் பக்கம் நாம் கிட்டி சேரும்படி செய்கிறார்.
ஜெபம்
பிதாவே, இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியமைக்கும் உம வலது பாரிசத்தில் அமரவைத்ததற்காகவும் உமக்கு நன்றி. எல்லா ஆட்சி அதிகாரத்திற்கும் மேலாகவும், எல்லா நாமங்களுக்கு மேலான வல்லமையையும் தந்ததற்காக உம்மை துதிக்கிறோம். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.