நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 14 நாள்

"நாள் 14: முறையீடு"

உடைக்கப்பட்ட உலகில், சங்கீதக்காரன், தன்னுடைய பொய்யான குற்றம்சாட்டுபவர்களை கையாள வேண்டும் என்று தேவனிடம் முறையிடுகிறார். இப்படிப்பட்ட முறையீடு ("என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு") யுத்தம், இனப்படுகொலை மற்றும் பாலியல் கடத்தல் போன்ற குற்றங்களை குறித்து தெரியாதவர்களுக்கு கடினமானதாக தோன்றலாம். ஆனாலும் நாம் அனைவரும் தவறுகளுக்கு தவறை திரும்பதர முயன்றிருக்கிறோம். இங்கு சங்கீதக்காரன் தானாக தவறை திரும்ப தராமல், தேவனிடம் தவறை சொல்லி முறையிடுகிறார். நீதியுள்ள பரிசுத்த தேவன் தவறை சரிசெய்ய அனுமதிக்கிறார்.

தேவன் மன்னிக்கிறவராக மாத்திரம் இருந்து நீதியுள்ளவராக இல்லாமல் இருந்தால், நமக்கு தவறு இளைக்க படும்போது நாம் செல்ல இடம் ஏதும் இருக்காது. ஆனால் தேவனுடைய பரிசுத்தம் தவறை பொறுத்துக்கொள்ளாது. அது முதலில் ஆறுதலாக இருந்தாலும், நாமும் தவறு செய்கிறவர்கள் தான், நமக்கு ஒரு தீர்வு இல்லையென்றால் நாமும் தவறுக்கு நியாயந்தீர்க்கப்படுவோம். சங்கீதக்காரனோ (நாமோ) தேவனிடம் முறையிட முடியும் என்றால், அதற்கு ஒரே காரணம் கிறிஸ்து நமக்காக ஏற்கனவே பேசியிருக்கிறார். கிறிஸ்து நமக்காக மரித்தபோது சிலுவையிலிருந்து கதறி, தள்ளப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டார். பாவம் நிறைந்த மனுக்குலத்தின் பாவத்தை தீர்த்தார். அந்த பாவமற்ற கிறிஸ்து நமக்காக பேசினத்தினால், இப்போது நாம் தேவனிடம் முறையிட முடிகிறது.

ஜெபம்

ஆண்டவரே, எங்கள் பிதாவே, உமக்கு விரோதமாக நாங்கள் செய்த எல்லா அநியாயத்தையும் மறைத்து நாங்கள் உம்மோடு உறவுகொள்ள கிறிஸ்துவை அனுப்பினத்தர்காக நன்றி. எங்கள் முறையீடுகளை நீர் கேட்பதற்க்காக நன்றி, எங்கள் மீது இரக்கமும் சாந்தமும் கொண்டிருக்கிறீர். எங்களுக்கு தீங்கு இழைக்கப்படும்போது உம்மிடம் எங்கள் முறையீடை கொண்டுவர உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.