நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 31 நாள்

"நாள் 31: குஷ்டரோகி"

பழங்காலத்தில் குஷ்டரோக நோயாளியாக இருப்பதுதான் ஒரு மனிதனுக்கு வரக்கூடிய மிக கொடிய நிலை. எப்போதெல்லாம் ஒரு குஷ்டரோகி மற்றவர்கள் மத்தியில் இருப்பானோ, அவன் "அசுத்தம் அசுத்தம்" என்று கூக்குரல் இட வேண்டும். அதன்மூலம் மற்றவர்கள் தூரமாக செல்வார்கள். குஷ்டரோகிகள் "தனியாக, பாளையத்திற்கு வெளியே" தங்க வேண்டும், அதன்மூலம் அந்த நோய் மற்றவர்களிடம் பரவாமல் காக்கப்பட்டது (லேவியராகமம் 13:45-46). குஷ்டரோகியாக இருந்தால் தனியாகவும் கேவலமாகவும் இருப்பதாக இருந்தது.

அப்போதுதான் இயேசு வந்து அனைத்தையும் மாற்றினார். சுவிசேஷத்தின் மிக அழகான காரியங்களில் ஒன்று இயேசு குஷ்டரோகிகளுடன் கொண்ட சம்பாஷணைகளை எழுதிய வண்ணம் தான். அவர்களிடம் அவர் சென்றார், அவரிடம் அவர்கள் சென்றனர். அவர்களை மரியாதை இரக்கத்தோடு நடத்தினார். யோசிக்கக்கூடாததை செய்தார்: அவர் அவர்களை தொட்டார், அவர் தொடும்போது அவர்கள் சுத்தமானார்கள். இயேசு குஷ்டரோகிகளை சுகமாக்கினார்.

அநேக வேத நிபுணர்கள் சரீர குஷ்டரோகத்திற்கும் ஆவிக்குரிய பாவத்திற்கும் அநேக ஒப்பனைகள் இருப்பதை காட்டுகிறார்கள். நம் இருதயத்தில் பாவம் இருந்தால் அது நம்மை தனிமை படுத்தும், தேவனிடமிருந்து மக்களிடமிருந்தும். அதை மறைக்கவோ நீக்கவோ முயன்றாலும், பாவத்தின் கரை நீங்காது. மக்பத் என்னும் கன்னியஸ்திரியை போல, பாவத்தை "காரையே" என்று அழுது துவைத்தாலும் ஒன்றும் நடக்காது. நாம் அசுத்தர்கள் தான், அதை நாம் அறிவோம்.

சுவிசேஷத்தின் நற்செய்தி என்னவென்றால் இயேசு கிறிஸ்து சுத்தத்தை பரப்பக்கூடியவர். அவர் குஷ்டரோகியை தொட்டபோது இயேசு குஷ்டரோகியாகவில்லை. அதற்கு மாறாக குஷ்டரோகி சுத்தமானான். வீணாக பாவத்தை நீக்க முயற்சிக்கும் ஒவ்வொருவரும் இயேசுவினிடம் அந்த முயற்சியை தரவேண்டும். அந்த நிகழ்வில் குஷ்டரோகியை போல, அந்த நன்றியறிவை கொண்டிருந்து, மற்றவர்களுக்கு இந்த சுத்தத்தை பரப்பும் மனிதனை குறித்து சொல்வோமாக.

ஜெபம்

பரம பிதாவே, எல்லாவற்றையும் தொட்டு சுத்தமாக்கும் உம் குமாரனை தந்தமைக்காக நன்றி. அவருடைய கிருபையினால் இன்றும் என்றென்றும் எங்கள் வாழ்க்கை தொடப்படுவதாக. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.