நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 30 நாள்

"நாள் 30: உபவாசம்"

இங்கு சாத்தான் இயேசுவை சோதித்த மூன்று விதங்களை பார்க்கிறோம். ஒவ்வொன்றும் முந்தியதை காட்டிலும் பெரிய சோதனை. முதலில் பசியின் மூலம் சோதனை, இரண்டாவது அவருடைய வல்லமையை பரபரப்பாக வெளிக்காட்டி தேவனுடைய ராஜ்ஜியத்தை உருவாக்க அவரது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த தூண்டும் சோதனை. மூன்றாவது முறை இயேசுவை தனது சிலுவை மரணத்தை தவிர்க்க, தன் ஊழியத்தை நிறைவேற்றாமல் இருக்க ஷ நம் சோதித்தான். தேவனை விட்டு தன்னை ஆராதித்தால், நம் அனைவரையும் இயேசுவுக்கு விட்டுவிட சாத்தான் தயாராக இருந்தான். பாடுகளை தவிர்த்து, மக்களை இரட்சித்து, தேவனை கைவிட்டு, சுலபமாக ஊழியத்தை முடிக்க. ஒவ்வொரு முறையும், இயேசு வேதத்தையே சார்ந்து இருந்தார், "ஆவியின் பட்டயம்" (ஏபேசியர் 6:17), பிசாசை எதிர்க்க.

இந்த சோதனைகள் இயேசுவின் ஞானஸ்தானத்திற்கு பிறகு நடந்தன. இயேசு ஊழியத்திற்கு அபிஷேகிக்கப்பட்ட உடனே, ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்கு 40 நாள் இரவு பகல் உபவாசிக்கவும், "சாத்தானால் சோதிக்கப்படவும்" அழைத்துச்சென்றார். இயேசுவின் வனாந்திர நாட்கள் மோசேயின் வனாந்திர நாட்களை நியாபகமூட்டுகின்றன. அவரும் அதே 40 நாட்கள் சீனாய் மழையின் மீது இருந்தார் (யாத்திராகமம் 34:28). மோசேயின் 40 நாட்களுக்கு பிறகு, தேவன் இஸ்ரவேலர்களுக்கு பத்து கட்டளைகளை தந்தார். ஆகவே இங்கு இயேசு புது மோசேவாக மோசே தந்த கட்டளைகளை நிறைவேற்ற வருகிறதை பார்க்கிறோம்.

ஜெபம்

கிருபையுள்ள ஆண்டவரே, எங்களைப்போலவே சோதிக்கப்படுவது எவ்வளவு கடினமானதென்று நீர் அறிந்திருக்கிறீர், உமக்கு நன்றி.சோதனையை எதிர்ப்பது எப்படி என்று கற்று தந்தமைக்காக நன்றி, சிலுவையை சுமந்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றியமைக்காக நன்றி. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.