நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 28: அழுகை"
சகராயா இந்த வார்த்தைகளை சொல்லியிருந்தாலும், இவைகள் நம் தேவனுடைய வார்த்தைகள். ஆனாலும் இது எப்படி சாத்தியம்? தேவன் எப்படி சொல்லமுடியும் "அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து..." தேவன் காயப்படுத்தப்பட முடியுமா? தேவன் குத்தப்படமுடியுமா? அது கொல்லப்படுவதற்கு சமமாக இருக்கும் அல்லவா? தேவன் எப்படி மரிக்கமுடியும்?
இயேசு கிறிஸ்து இந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். அவர் முழுவதும் தேவன் மாத்திரம் அல்ல, அவர் முழுவதும் மனிதனாகவும் இருந்தார். தீர்க்கதரிசனம் சொன்னது போல, இயேசு "ஒரே பிள்ளையாக" மற்றும் "முதல்பேரானவராக" தேவ குமாரனாக இருந்தார் (யோவான் 3:16). அவர் மறித்து, சிலுவையில் மறித்து, குத்தப்பட்டார். "போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்" (யோவான் 19:34).
அந்த தீர்க்கதரிசனம் இன்னும் சிலதை சொல்லியது. அவரை குத்தினவர்கள் அழுவார்கள் ஏனென்றால் தேவன் அவர்கள் மீது "கிருபையின் ஆவியையும் இரக்கத்தின் கதறலையும்" ஊற்றுவார். மற்றொரு விதத்தில் சொன்னால் ஆவியானவர் அவர்கள் கண்களை திறந்து அவர்கள் செய்தவையையும் அவர்கள் பாவமும் எவ்வளவு பெரிதாக இருந்தது என்று காட்டுவார். இந்த அழுகை பரவி இருக்கும் ஆனாலும் தனிப்பட்ட ரீதியிலும் கிரியை செய்யும் - "தேசம் அலுத்து, ஒவ்வொரு குடும்பமும் கதறும்".
ஒரு பாகம் இந்த தீர்க்கதரிசனம் பெந்தேகோஸ்தே நாளில் நிறைவேறிற்று. பேதுரு கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் "அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்." (அப்போஸ்த்தலர் 2"23). அதைக்கேட்டு அந்த மக்கள் "இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி," (அப்போஸ்தலர் 2:37-41). இன்று இந்த தீர்க்கதரிசனம் இன்னமும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. ஆவியானவர் நம்மை கிருபையினால் நிரப்பும்போது, நாம் கிறிஸ்துவின் மரணத்திற்காக அழுகிறோம், ஏனென்றால் நாம் அறிவோம் "அவர் நம் மீறுதல்கட்காய் காயப்பட்டார்" (ஏசாயா 53:5). நம்முடைய துக்கத்தில், அவர் மரணம் "சமாதானத்தை உண்டுபண்ணி, அவர் தழும்புகளால் குணமானோம்" ஆகையால் களிகூருகிறோம்" (ஏசாயா 53:5).
ஜெபம்
தேவனே, எங்களுடைய பாவம் உம்மை குத்தியது என்று அறிக்கை இடுகிறோம். ஆகவே நாங்கள் அலுத்து, உம்முடைய கிருபை மற்றும் இரக்கத்தின் ஆவியை எங்கள் மீது ஊற்றவேண்டும் என்று கெஞ்சுகிறோம். தாழ்மையில் உம்முடைய இரக்கம் ஒருபோதும் தோற்காது என்று களிகூருகிறோம். நாங்கள் பாவிகளாய் இருக்கும்போதே, கிறிஸ்து எங்களுக்காக மரித்தார் (ரோமர் 5:8). கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.