நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 27: வரப்போகும் ராஜா"
பழங்காலத்தில், ஒரு ராஜா தன் யுத்தபலத்தை காட்ட பட்டணங்களுக்குள் ஒரு யுத்த குதிரையின் மீது சவாரிசெய்து வருவான். முக்கியமாக புதிதாக ஜெயிக்கப்பட்ட பட்டணங்களுக்குள் தன் ஆட்சியை நிச்சயப்படுத்த அவ்வாறு செய்வான். ஆனால் ஒரு பிரியமான ராஜா தன் சொந்த பட்டணத்துக்குள் வரும்போது யுத்த குதிரையின் மீது வரமாட்டான். அந்த சூழலில், ஒரு கழுதையின்மீது சவாரிசெய்து வருவான் - பிரியமான ராஜா.
சகராயா தீர்க்கதரிசி எருசலேம் தன் சொந்த ராஜாவை காணும் நாளை குறித்து சொல்கிறார். முடிவாக தன் எதிரிகளை அவர் ஜெயித்து, நிலையான இரட்சிப்பை கொடுத்து சமாதானத்தின் ஆட்சியை உண்டுபண்னுவார். இந்த புது ராஜாவின் நம்பிக்கை, கழுதையின் மீது சவாரிசெய்து, ஜனக்கூட்டம் "ஓசன்னா, தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா! தேவனுடைய நாமத்தில் வருபவருக்கு ஓசன்னா" என்று சொல்ல செய்தது. இயேசு எருசலேமுக்குள்ளாக பவனிச்செய்து வந்தார்-அதுவும் ஒரு கழுதையின் மேல்.
ஆனாலும் இதே ஜனக்கூட்டம் கோபமடைந்து இரத்தத்திற்காக அழைத்தது. "சிலுவையில் அரையுங்கள்!" இயேசு வரப்போகும் ராஜாவாக வரவழைக்கப்பட்டவர் இப்பொது எதிர்க்கும் ஒரு கோபமான ஜனக்கூட்டத்தை சந்திக்கிறார். உண்மையான ராஜா ஒரு கழுதையின் மீது சவாரிசெய்து தன் தேசத்திற்கு வந்தார், ஆனால் அவர் ஜனங்களோ அவரை காட்டிக்கொடுத்தனர். ஆனாலும் அவர் ஒரு யுத்த குதிரை மீது வராமல், ஒரு கழுதையின் மீது சமாதானத்தோடு வந்தார். ஆனாலும் அந்த கோபமான தன் ஜனகளுக்காக - நமக்காக - மிக சிறந்த தியாகத்தை செய்து வெற்றியை சம்பாதித்தார். நம் குற்றத்தை நீக்கி பாவமன்னிப்பை பெற்று ஜெயித்தார். இந்த ராஜா ஜெய்த்த சத்துரு, நாமாகவே மாறிப்போனோம். அவருடைய வெற்றியின் விலை நம்முடைய பிரியமான ராஜாவின் மரணம். அவர் அதை செய்தார். சீயோன் குமாரத்தியே களிகூரு, எருசலேமின் மகளே கெம்பீரமாய் பாடு!
ஜெபம்
தேவனே, எங்கள் துரோகத்திற்காக உம்முடைய ஜீவனை பலியாக தந்தமைக்காக நாங்கள் களிகூர்ந்து ஆர்ப்பரிக்கிறோம். எங்கள் பிரியமான ராஜாவாக உம்மை துதிக்கிறோம். வந்து எங்கள் இருதயத்தில், எங்கள் ஜீவியத்தில், எங்கள் பட்டணத்தில் ஆளுகை செய்யும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.