நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 26 நாள்

"நாள் 26: தேசங்களின் பொக்கிஷம்"

ஆகாயின் புத்தகம் பாபிலோனிலிருந்து தேவாலயத்தை கட்ட திரும்பின மக்களுக்காக எழுதப்பட்டது. அது உற்சாகத்தை அளித்து அழிந்துகிடந்த இடங்களில் கட்டவும், அழிவின் மத்தியில் நம்பிக்கையை கொடுக்கவும், கஷ்டங்கள் மத்தியிலும் சோர்வின் மத்தியிலும் விசுவாசிக்கவும் சொல்லுகிற ஒரு புத்தகம்.

வசனங்கள் 6-9-இல், ஆகாய் இதுவரை அசைக்கப்படாத அளவிற்கு இந்த உலகம் இசைக்கப்படும் வேலை வரும் என்று சொல்லுகிறார். உடைந்து கிடந்த இடத்தில் இருந்த மக்களுக்கு உற்சாக படுத்த இதை சொன்னார், என்றால் வேடிக்கையாக இருக்கிறது! இது முதலில் புரியவில்லையென்றாலும், எபிரேயர் புத்தகத்தை எழுதினவர் இந்த உலகம் அசைவதில் ஆறுதல் அடைந்தார், "அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று;...." (எபிரேயர் 12:26-28).

ஆகாயின் முழக்கத்தில் எல்லா சிருஷ்டிப்பும் (வசனம் 6) எல்லா தேசங்களும் (வசனம் 7) அசைக்கப்படும். அங்கு ஒரு வாக்கும் இருக்கிறது "தேசங்களின் பொக்கிஷங்களை வரும்". "பொக்கிஷம்" என்றால் எபிரேய மொழியில் ஒருமையாகவும் பன்மையாகவும் உபயோகிக்கும் ஒரு வார்த்தை. அநேக பொக்கிஷங்களும் தேவாலயத்திற்குள் வரும், கூடவே ஒரு பொக்கிஷம், உண்மையான பொக்கிஷம் அந்த ஆலயத்தை நிரப்பி உலகத்தின் எல்லா பொக்கிஷத்தை காட்டிலும் விலையேறப்பற்றதாக இருக்கும். ஆகாய் -க்கு இந்த உலகம் அசைக்கப்படும்போது தான் இந்த பொக்கிஷத்தை விலையை புரிந்து கொள்வோம் என்று தெறிந்திருந்தது.

உன்னுடைய உலகம் அசைக்கப்படும்போது, அதோடுகூட நீயும் அசைகிறாயா அல்லது நிலைக்கிறாயா? உன்னுடைய இருதயத்தின் பொக்கிஷங்கள் உன்னை ஏமாற்றும்போது உன்னுடைய இருதயமும் ஏமாறுகிறதா அல்லது இந்த தேசங்களின் பொக்கிஷத்தை பிடித்துக்கொள்கிறதா?

ஜெபம்

பிதாவே, என்னுடைய உலகம் அசிக்கப்படும்போது உம்முடைய அசையாத ராஜ்யத்தை பிடித்துக்கொள்ள உதவும். இயேசு சிலுவையில் இருந்த பொது அந்த பூகம்பத்தை தப்பித்தார், அதேபோல நானும் அசையாதபடி உதவும். நான் அதனால் அசைக்கப்படாமல் இருப்பேன்.நீரே தேசங்களின் பொக்கிஷம் என்று அறிந்து கொள்ள உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.