நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 25: நல்ல மேய்ப்பன்"
வேதாகமத்தில் அநேக முறை தேவ ஜனம் ஆட்டு மந்தையாக வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். எசேக்கியேல் 34-ஆவது அதிகாரத்தின் ஆரம்பத்தில் அன்றைய நாட்களின் மேய்ப்பர்கள் (இஸ்ரவேலின் ஆளுநர்கள்) அவர்களுடைய வல்லமையை தவறாக உபயோகித்ததற்க்காக கண்டிக்கப்பட்டார்கள் (34:1-22). தீர்க்கதரிசி அவர்கள் சேவிக்க வேண்டிய அதே மக்களால் தடியாகவும் பணக்காரர்களாகவும் மாறியிருப்பதை வர்ணிக்கிறார். அதனால், தேவன் அவர்கள் மீது நியாயத்தீர்ப்பை வரப்பண்ணுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அதிகாரத்தில் அதற்குப்பிறகு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டு அந்த மனநிலை மாறி மேலே கொடுக்கப்பட்ட வசனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தேவன் ஆடுகளை இரட்சித்து மாத்திரம் அல்ல, அவர் ஒரு ராஜாவை, தாவீதை போன்ற ஒருவரை அவர்களுக்கு =நிலைக்கும் சமாதானத்தை கொண்டுவரும்படி உண்டுபண்னுவார் (வசனம் 25). பாவத்தினால் மக்கள் இழந்த சமாதானம் இளைப்பாறுதல் அது (ஆதியாகமம் 3:15; 4:8). அதைக்குறித்து எசேக்கியேலை போன்ற தீர்க்கதரிசிகள் அன்றிலிருந்து வாக்களித்து கொண்டிருந்தார்கள் (ஏசாயா 9:6-7). இங்குதான் நாம் நம் கண்களை உயர்த்தி இயேசுவை காண்கிறோம், அவரே தேவனின் முழு நிறைவான மேய்ப்பர், ராஜா.
சுவிசேஷ எழுத்தாளர்கள் இயேசு தரித்திரர்களுக்கு நற்செய்தி சொல்லவும், கைதிகளுக்கு விடுதலையை கொடுக்கவும், குருடர்களும் பார்வை அளிக்கவும் வந்தார் என்று சொல்லியிருக்கிறார்கள் (லூக்கா 4:18). இயேசு தாமே எருசலேமை கண்டு அழுகிறார், அவர்கள் சமாதானத்தை கொடுப்பது என்ன என்று அறியாமல் இருந்தபடியால் (லூக்கா 19:41). இயேசு தாமே நாம் தேவனோடும் ஒவ்வொருவரோடும் சமாதானம் கொண்டிருக்க ஆடுகளுக்காக தன உயிரை தருகிற மேய்ப்பராக இருக்கிறார். இயேசு தாமே அவருடைய வருகையால் உலகத்திற்கு சமாதானத்தை கொடுப்பார் (வெளிப்படுத்துதல் 21). இந்த இடைவெளியில் நமக்கு அநேக துக்கங்கள் உண்டாகி தேவன் தன் வாக்கை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை தடுக்க கூடும். உலகத்தின் அநியாயம் நம்மை சந்தேகிக்க வைக்கக்கூடும். இந்த வேளைகளில் தான் இயேசு என்னும் நல்ல மேய்ப்பர் மீது நம்முடைய கவனத்தை வைத்து அவர் ஆடுகளுக்காக தன் ஜீவனையே கொடுத்தார் என்றும் நாம் "தேவனுடைய வீட்டில் என்றெட்னரும் வாழுவோம்" என்றும் விசுவாசிக்க வேண்டும்.
ஜெபம்
கர்த்தராகிய இயேசுவே, ஆடுகளின் மீது உம்முடைய அன்பு பராமரிப்பிற்காக நன்றி. உம்முடைய சமாதானத்தை அறிந்து உம்முடைய மகனாக மகளாக மாற நீர் சிலுவையில் மரித்ததர்காக நன்றி. இந்த நினைவுகூறுதலின் நாட்களில், உம்முடைய அன்பின் வெளிச்சத்தில், என்னுடைய உறவுகளில் சமாதானத்தை காண உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.Lord Jesus, thank you for your love and care for your sheep.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.