நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 22: தண்ணீர்கள்"
இந்த வசனங்களில், பரிசுத்தர் ஏசாயாவின் மூலம் அழைக்கிறார், அழிக்கப்படும் தருவாயில் இருந்த அவரின் ஜனத்திடம் கெஞ்சி ஜீவியத்தின் ஊற்றிடம் வர அழைக்கிறார்.ஜீவத்தண்ணீரின் ஊற்றுகளுக்கு வர எந்த தடையும் இன்றி இருக்கக்கூடிய அழைப்பு அது. வசனங்கள் 2-3 இந்த தண்ணீர் தேவனுடைய வார்த்தை என்று தெளிவுபடுத்துகிறது. அந்த அழைப்பு நன்றாய் பருகும்படியாக சொல்கிறது. வார்த்தையை பெற்று, அதோடு சரியாகுவதற்கு, களிகூருவதற்கு, இதற்குமுன் கேட்டிராதபடி அதை கேட்பதற்கு. "கவனமாய் கேளுங்கள்" (வசனம் 2) எந்த சிதறலும் இல்லாமல் கேள். முடிவில் இந்த வார்த்தை இவர்களை இரட்சிக்கப்போகிறது (வசனம் 3) மாற்றப்போகிறது (வசனம் 7), முழு உலகத்திற்கும் அவர்களை ஆசீர்வாதமாக வைக்கப்போகிறது (வசனம் 5). அவர்கள் மன உருக்கமுள்ள தேவனோடு ஒரு ஐக்கியத்திற்குள்ளாக வர அழைக்கப்படுகிறார்கள் (வசனம் 7). ஆனால் அவர்கள் அவருக்கு செவிகொடுக்க மறுக்கிறார்கள் (6:9).
லெந்து நாட்கள் ஏசாயாவின் நாட்களின் மக்களைப்போல நாமும் சுபாவம் கொண்டிருக்கிறோம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய நாட்கள். தேவனுடைய வார்த்தையையும் முடிவில் தேவனையும் தள்ளிவிடுகிறவர்களாகவே நாம் இருக்கிறோம், கரணம் என்னவாக இருந்தாலும். தேவனுடைய வார்த்தையில்லாமல் சிறிது நேரம் நாம் விடப்பட்டால், ஒரு ஆவிக்குரிய தூக்கம் நம்மை பிடித்துவிடுகிறது. தேனிலும் இனிய அந்த சுவையை மறந்துபோகிறோம் (சங்கீதம் 19:10). லெந்து நாட்கள் அந்த கிணற்றண்டை இயேசுவை சந்தித்த ஸ்திரீயை நினைவுகூர வைக்கும் நாட்கள் - இயேசுவை அவள் சுத்தமான, அளவற்ற தங்கமான ஆத்துமாவுக்கு திருப்தியாக கண்டாள். அந்த கிணற்றிற்கு நாமும் வந்து பருக அது நமக்கு ஒரு அழைப்பாக இருக்கிறது. நான் தரும் தண்ணீரை பருகினால், ஒருவனும் தாகம் அடைய மாட்டான். அவனில் அது ஒரு ஜீவா நதி ஊற்றாக இருக்கும் (யோவான் 4:14).
ஜெபம்
கிருபையுள்ள ஆண்டவரே, மனதுருக்கத்தில் நீர் அழைக்கிறீர். உம்முடைய இரக்கத்தில் உம்முடைய சத்தத்தை கேட்க எங்கள் காதுகளை திறவும், உம்மை கேட்டு திரும்ப உதவும். எங்கள் கண்களில் இருக்க கூடிய மறைபொருள்களை நீக்கி உம்முடைய வார்த்தையில் இருக்கக்கூடிய அதிசயங்களை காண உதவும். எங்கள் சந்தோஷமாக இரும். எங்கள் திருப்தியாக இரும். உம்மில் நம்புகிறவர்கள் வெட்கப்படமாட்டார்கள், ஆதலால் உம்மில் நம்ப உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.