நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 16: வெற்றிவீரன்"
சங்கீதம் 68:7-18 இரட்சிப்பில் தேவனுடைய வல்லமையை குறிக்கும் துதியின் பாடல். இந்த பகுதியில் மூன்று காரியங்கள் இருக்கின்றன. வசனம் 7-10 எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் இஸ்ரவேல் ஜனத்தை விடுவித்த வல்லமையைக்குறித்து பேசுகிறது. வசனம் 11-14 சத்துருக்களின் மத்தியில் இப்போது இஸ்ரவேல் ஜனங்கள் வாசிக்கும்போது தேவனுடைய பாதுகாக்கும் வல்லமையை குறித்து பேசுகிறது. முடிவில் வசனம் 15-18 தன்னுடைய மக்களை பத்திரமாக தேவனுடைய சிகரத்திற்கு கொண்டு செல்லப்போகும் வல்லமையை சொல்லி களிகூருகிறது.
இந்த மூன்று காரியங்கள் ஒரு கிறிஸ்துவனின் ஜீவியத்தை குறிக்கிறது. நாம் பாவம், மரணம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டிருக்கிறோம், இந்த நாளின் பிரயாணத்தில் பாதுகாக்கப்படுகிறோம், பத்திரமாக வீடு சென்றடைவோம் என்று வாக்களிக்கப்பட்டிருக்கிறோம். இந்த அற்புதமான சாத்தியங்கள் எப்படி சாத்தியமாகிறது? இந்த நன்மைகள் ஒரு வெற்றிவீரனினால் நமக்கு உண்டாகிறது.
சங்கீதம் 68:18 உயர எழுந்தவரை குறித்து சொல்கிறது, அவருடைய வழியில் அநேகரை வழிநடத்தியவர். பரிசுத்த பவுல் சொன்னபிரகாரம், கிறிஸ்து இயேசு மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்ததினால் இந்த வெற்றியை சம்பாதித்தார (ஏபேசியர் 4:8).
எபிரேயர் 12:2 - இல், இயேசுவின்மீது நம் கண்களை பாதிக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறோம், நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரும். அது நம் விசுவாசத்தின் வெற்றிவீரர் என்று பொருள் தரும். இயேசு பாவத்தையும் மரணத்தையும் நெருங்கி சென்றார், ஆனால் ஜெயித்தார்! அவர் யுத்தத்தை போராடி வென்றார். நமக்காக மரணத்திற்கு விரோதம் வெற்றிபெற்றார். இயேசுவில் கிரியை செய்த அதே வல்லமை நம்மிலும் கிரியை செய்கிறது என்பதால் நாம் இளைப்பாறலாம் (1 கொரிந்தியர் 6:14).
இன்று பயந்த நிலையில் நீ இருக்கிறாயா, வருங்காலத்தை குறித்து? இந்த வசனங்களின் சாத்தியங்கள் உன்னுடைய இன்றைய ஜீவியத்தில் கொண்டிருக்கும் வல்லமையை நினைவு படுத்தட்டும். அவர் நம் வெற்றிவீரர். அவரால் நாம் அடிமைத்தனத்திலிருந்து கொண்டுவரப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, அவரின் கிருபையால் பத்திரமாக சென்றடைவோம்.
ஜெபம்
பரம பிதாவே, எங்கள் கிறிஸ்து இயேசு என்னும் வெற்றிவீரரினால் உண்டான வல்லமை எங்கள் ஜீவியத்தில் இருப்பதினால் உமக்கு நன்றி. இன்று அவரைக்கொண்டு எங்களுக்கு தைரியமும் சந்தோஷமும் நீர் தரும்படியாக ஜெபிக்கிறோம். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.