நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 15 நாள்

"நாள் 15: தள்ளப்பட்டவர்"

சங்கீதம் 22 ஒருவருடைய வேதனையை காட்டுகிற சங்கீதங்களின் துவக்கமாக இருக்கிறது. அது தேவனின் பாடுகளை ஏசாயாவில் எழுதியிருக்கிறதற்கு ஒப்பாக இருக்கிறது. இந்த சங்கீதத்தின் முதல் வாக்கியம் நமக்கு தெஇர்ந்த ஒன்று, ஏனென்றால் இயேசு இதே வார்த்தைகளை சிலுவையில் அறியப்பட்டபோது சொன்னார். ஆனாலும் இந்த சங்கீதம் தாவீதிநாள் அநேக தலைமுறைகளுக்குமுன் எழுதப்பட்டது. தாவீது சந்தித்த எந்த வேதனையாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு சிலுவையில் கிறிஸ்து அனுபவித்த வேதனையை தீர்க்கதரிசனமாக சொன்னார்.

இயேசு இந்த சங்கீதத்தை அநேக வேளை வாசித்திருப்பார் அவருடைய ஆராதனைகளில். அவர் அதை மனப்பாடம் செய்தும் வைத்திருந்தார், ஆகவே தான் சிலுவையில் இருந்து அவரால் அதை சொல்லமுடிந்தது.

அவர் சந்திக்கவிருந்ததை அறிந்தவராக, இயேசு தன் ஜீவியத்தை பயத்தினாலும் நடுக்கத்தினாலும் செலவளித்திருக்கலாம். அதற்கு மாறாக, தனக்கு முன் தாவீதை போல, எது சாத்தியமோ அதை பிடித்துக்கொண்டார் - தேவன் பரிசுத்தர், தேவனே தன்னுடைய தேவன், அவருடைய ஜீவியம் முழுவதும் தேவன் உண்மையுள்ளவராக இருந்திருக்கிறார். இந்த சாத்தியங்களினால், தாவீது தேவனை தன்னோடு இருக்கும்படி அழைக்கிறார். இயேசு அறிந்திருந்தார், அவர் சந்திக்கவிருந்த மிகப்பெரிய வேதனை தேவனால் கைவிடப்படுவதுதான் என்று, அதன்மூலம் தேவன் தன் ஜனத்தை என்றும் கைவிடாமல் இருக்க.

இந்த சங்கீதம் துதியினாலும் வெற்றி தொனியோடும் முடிகிறது, "அவரே அதை செய்துமுடித்தார்":. இயேசு கடைசி மட்டும் இருந்தார், நம் பாவங்களை சுமந்து தீர்த்தார், தேவனோடு நம்முடைய மீட்ப்பை சம்பாதித்து தீர்த்தார். இயேசு நமக்காக தேவனால் முற்றிலும் கைவிடப்பட்ட படியால், நாம் கைவிடப்பட மாட்டோம் என்பதில் நிச்சயமாக இருக்கலாம். நம்முடைய வேதனையில் தேவன் நம்மை விட்டு தூரமாக தோன்றினாலும்.

ஜெபம்

கிருபையுள்ள தேவனே, இயேசு தேவனைவிட்டு முற்றிலும் பிரிக்கப்படுவதென்றால் என்ன என்று அறிந்திருந்ததினால், நாங்கள் அதை உணரவேண்டியதில்லை, ஆகவே உம்மை துதிக்கிறோம். இதை சந்தேகிக்க அநேக காரணங்கள் இருந்தாலும், அதை நிச்சயமாக நம்ப உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.