அதற்கு ஏசா, “இதோ பார், நான் பட்டினியால் சாகப் போகின்றேன். இந்த மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையினால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டான்.
ஆனால் யாக்கோபு ஏசாவிடம், “முதலில் அதை எனக்கு சத்தியம் செய்துகொடு” என்றான். அவ்வாறே ஏசா ஆணையிட்டுச் சத்தியம் செய்து, தன் மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.