நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போல் பெருகச் செய்து, இந்நாடுகள் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். உன் சந்ததியினரின் ஊடாக பூமியில் உள்ள அனைத்து இனங்களும் ஆசீர்வதிக்கப்படும். ஏனெனில் ஆபிரகாம் என் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, எனது பிரமாணங்களையும், கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் நிறைவேற்றினான்” என்றார்.