“பார்வோன் உங்களிடம் ஒரு அற்புதத்தை செய்து காட்டுங்கள் என்றால் நீ ஆரோனிடம், ‘உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாக கீழே எறிந்து விடு’ என்று சொல், அது பாம்பாக மாறும்” என்றார்.
அவ்வாறே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் கர்த்தர் கட்டளையிட்டபடி செய்தார்கள். பார்வோனுக்கும் அவன் அலுவலர்களுக்கும் முன்பாக ஆரோன் தன் கோலைக் கீழே எறிந்தபோது, அது பாம்பாக மாறியது.