ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று, உயர்த்திய கரத்தினால் நான் ஆணையிட்ட நாட்டுக்கு உங்களைக் கொண்டுவருவேன்; நான் அதை உங்களுக்கு உடைமையாகக் கொடுப்பேன். நானே கர்த்தர்’ ” என்றார்.
மோசே இஸ்ரயேலருக்கு இவற்றை அறிவித்தார். ஆனால் அவர்களோ மனமுடைந்து, கொடூரமான அடிமைத்தனத்தில் துன்பப்பட்டதனால் அவனுக்கு செவிமடுக்கவில்லை.