அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ கீழே இறங்கிப் போ. ஏனெனில் எகிப்திலிருந்து நீ வெளியே கொண்டுவந்த உன் மக்கள் சீர்கெட்டுப் போனார்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி நடவாமல், விரைவில் வழிதவறி கன்றின் உருவமுடைய ஒரு விக்கிரகத்தைத் தங்களுக்கென செய்திருக்கின்றார்கள். அவர்கள் அதை வணங்கி, பலி செலுத்தி, ‘இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள். இவையே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன’ என்று சொன்னார்கள்” என்றார்.