“இதோ, நான் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனுடைய பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலைப் தெரிவுசெய்திருக்கின்றேன். நான் அவனை இறைவனுடைய ஆவியானவரால் நிரப்பி, ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், அறிவுக்கூர்மையையும் கொடுத்து, கலையாற்றலுடன் தங்கத்திலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும் வேலை செய்வதற்கும், இரத்தினக் கற்களை வெட்டிப் பதிப்பதற்கும், மரத்தைச் செதுக்கி வேலை செய்வதற்கும், எல்லாவித கைவினையுள்ள வேலைகளையும் செய்வதற்கான திறமைகளைக் கொடுத்திருக்கிறேன்.