நீர் எங்களுடன் வராவிட்டால், என்மீதும் உம்முடைய மக்கள்மீதும் நீர் பிரியமாயிருக்கிறீர் என்பதை எவ்வாறு அறிவது? பூமியின் மேற்பரப்பில் இருக்கும் மக்களிலிருந்து உமது மக்களை எவ்விதம் வேறுபடுத்திக் காட்டுவது?” என்று கேட்டார்.
அதற்கு கர்த்தர் மோசேயிடம், “நீ கேட்டுக்கொண்ட இந்தக் காரியத்தையே நான் செய்வேன். ஏனெனில் நான் உன்னிடம் பிரியமாய் இருக்கின்றேன். நான் உன்னைப் பெயராலே அறிந்திருக்கின்றேன்” என்றார்.