கிரியைகளினால் அல்ல கிருபையினால்மாதிரி

தேவனுடைய ராஜ்யம் சுதந்தரிக்க
“நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்”. கொலோ 3:1,2
அழிந்துபோகக்கூடிய கூடாரத்திலிருந்து விடுதலை பெற்று, கைவேலையல்லாத, அழியாத வாசஸ்தலத்திற்குள் பிரவேசித்து, நித்திய நித்திய காலமாய் தேவனோடு வாழும் கிருபை பெற்ற நாம் எப்படி வாழவேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் வேதத்தின் வெளிச்சங்களை தியானிப்போம் வாருங்கள்!
மாம்ச சுபாவம்:
நாம் பாவம் செய்வதால் மாத்திரம் பாவிகளல்ல. பாவிகளாய் பிறந்திருப்பதால், பாவம் செய்யக்கூடிய ஜென்ம சுபாவத்தோடு பிறந்திருப்பதால் பாவிகளாயிருக்கிறோம். பழைய மனுஷனாகிய ஆதாமை களைந்துபோட்டு, கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வுபெற தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். பிறந்தநாள் முதல், கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்தநாள் முதல், கல்லறை சென்றடையும் வரை “ஆவிக்குரிய சுபாவமும், ஜென்ம சுபாவமும்” நமக்குள்ளே யுத்தங்களை நடப்பித்துக் கொண்டே இருக்கும். “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது” (கலா 5:19-21). இப்படிப்பட்ட மாம்சகிரியைகளுக்கு தங்களை விற்றுப்போட்டவர்கள் பரலோகராஜ்யம் சுதந்தரிப்பதில்லை.
சிலுவையிலறையப்படுதல்:
பரலோகராஜ்யத்திற்கு பங்குள்ளவர்களாகிய, “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும், அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையிலறைந்திருக்கிறார்கள்” (கலா 5:24). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக்கா 9:23) என்று சீஷத்துவத்திற்கு அழைக்கிறார். அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் தன்னை சீஷத்துவத்திற்கென்று முழுவதுமாக அர்பணித்து கலாத்திய நிருபத்தில் மாத்திரம் மூன்று முறை “சிலுவையிலறையப்பட்டேன், சிலுவையிலறைந்திருக்கிறார்கள், சிலுவையிலறையுண்டிருக்கிறது”. (கலாத்தியர் 2:20, 5:25, 6:14) என்று சீஷத்துவத்திற்கென்று „அறைகூவல்‟ கொடுக்கிறார். விசுவாசி என்பவன், தன் மனம் போன போக்கில் வாழ்பவன் அல்ல, அதற்கு மாறாக, கிறிஸ்துவுக்குள், கிறிஸ்துவுக்காக, தன்னை அர்ப்பணித்து தியாகவாழ்வு வாழ்பவனே „சிலுவையிலறையப்பட்டவன்‟
ஆவியின் சுபாவம்:
ஆவியினால் நடத்தப்பட்டவர்கள், ஆவியின் கனியாகிய அன்பு, சந்தோஷம்,… (கலா 5:22,23) முதலானவைகளால் நிரப்பப்பட்டு கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்துவார்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும், கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்தி சாட்சியுள்ள சவாலான வாழ்க்கை வாழ தியாகவாழ்வுக்கு விட்டுக் கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் நமது வாயின் வார்த்தையினாலும், வாழ்க்கையினாலும் கிறிஸ்துவை காண்பிக்க கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள்.
பரலோகப்பிதாவே, கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்தி சாட்சியுள்ள சவாலான வாழ்க்கை வாழ்ந்து, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறவர்களாக மாற்றும். ஆமென்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதின கடிதம் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று விசுவாசத்தினால் அழைக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Live Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: livecommunity.org




