நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 20: பாவமற்ற ஊழியக்காரன்"
இந்த வசனங்களில், தேவனுக்கு கீழ்ப்படிந்து ஊழியக்காரர்களையும் அவரை ஒடுக்கி அவமானப்படுத்தினவர்களையும் பார்க்கிறோம். ஆச்சரியவிதமாக, கீழ்ப்படியாத மக்களுக்காக கீழ்ப்படிந்து ஊழியக்காரனே பாடு அனுபவிக்க அழைக்கப்படுகிறான் - அடிக்கப்பட்ட, துப்பப்பட, அவமானப்படுத்தப்பட்ட. ஆனாலும் அவர் "தன் முகத்தை இரும்பாக வைத்தார்" அந்த பாடுகளின் வழியை தேர்ந்தெடுத்து "அவமானப்படால் இருந்தார்". அவருடைய பாடுகள் வீணானது இல்லை ஏனென்றால் அதன்மூலம் அவர் மக்கள் மீட்கப்படுவார்கள் என்று அறிந்திருந்தார்.
புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் தேவனின் ஊழியக்காரரை அடையாளம் கண்டுகொண்டார்கள், அதை இயேசு கிறிஸ்து என்றும் சொன்னார்கள். அவர் தன முகத்தை எருசலேமுக்கு நேராக வைத்தார், அவருக்கு அங்கு காத்துக்கொண்டிருந்த பாடுகளை அறிந்திருந்தார் (லூக்கா 9:51). அவர் அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, துப்பப்பட்டார் (மாற்கு 15:19-20). அவர் பாடு அனுபவித்தார், அவர் பாவியென்பதால் அல்ல ஆனால் நம்முடைய பாவத்திற்காக, அவருடைய ஜீவியம் பரிபூரண கீழ்ப்படித்தலினால் குறிக்கப்பட்டது, சிலுவையின் மரணம் பி[பரியந்தம் (பிலிப்பியர் 2:5-9).
இவைகள் எல்லாவற்றிலும், இயேசு பாவமற்ற ஊழியராக இருந்தார் (எபிரேயர் 12:2). இயேசு எவ்வாறு இதை எல்லாம் அனுபவித்தும் அவர் முடிவில் அவமானத்திற்கு உற்படுத்தப்படமாட்டார் என்று நிச்சயமாக இருந்திருக்க முடியும்? வார்த்தையில் இதற்கான பதில், சந்தோசம்:: அவருக்கு முன்பாக வைக்கப்பட்ட சந்தோசம், அவர் சிலுவையை ஏற்றுக்கொண்டார்". அவரின் பாடுகளினம் மூலம் அவருடைய ஜனம் மீட்கப்படுவார்கள் என்பதே இயேசுவின் சந்தோஷமாக இருந்தது.
நமக்கும் முன்பாக வைக்கப்பட்டிருந்த சந்தோசம் இருக்கிறது. நிச்சயமாக வழியும் பாடுகளும் நம் பாதையில் இருக்கிறது, ஆனால் விசுவாசத்தினால் தேவனோடு ஒன்றாக இருப்பது, நாம் நிச்சயம் வெட்கப்படமாட்டோம்! நாம் நம்முடைய சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றுவோம், பாவமற்ற ஊழியக்காரரை.
ஜெபம்
பரம பிதாவே, எங்கள் பாவமற்ற ஊழியக்காரரான இயேசுவின் ஜீவியம், மரணம் மற்றும் உயிர்தெழுதலுக்காக உமக்கு நன்றி சொல்கிறோம். இந்த நற்செய்தி நாங்கள் வலியின் மத்தியிலும் பாடுகளின் மத்தியிலும் இருக்கும்போது எங்களுக்கு பெலன் தரட்டும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.