1
ஆதியாகமம் 45:5
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
என்னை விற்பனை செய்ததற்காக நீங்கள் இப்போது கலங்க வேண்டாம், அதற்காக உங்கள்மேல் நீங்கள் கோபம்கொள்ளவும் வேண்டாம். ஏனெனில், உயிர்களைப் பாதுகாப்பதற்காக இறைவன் உங்களுக்கு முன்பாக என்னை இங்கு அனுப்பினார்.
ប្រៀបធៀប
រុករក ஆதியாகமம் 45:5
2
ஆதியாகமம் 45:8
“ஆகையால் நீங்களல்ல, இறைவனே என்னை இங்கு அனுப்பினார். அவரே என்னைப் பார்வோனுக்கு முதன்மை ஆலோசகராகவும், அவனது குடும்பம் முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் ஏற்படுத்தினார்.
រុករក ஆதியாகமம் 45:8
3
ஆதியாகமம் 45:7
பூமியில் எஞ்சியுள்ள உங்கள் சந்ததியைப் பாதுகாத்து வைக்கவும், உங்கள் உயிர்களை ஒரு மாபெரும் மீட்பினால் காப்பாற்றவுமே இறைவன் என்னை உங்களுக்கு முன்பாக இங்கு அனுப்பியுள்ளார்.
រុករក ஆதியாகமம் 45:7
4
ஆதியாகமம் 45:4
யோசேப்பு தன் சகோதரர்களிடம், “என் அருகே வாருங்கள்” என்றான். அவர்கள் வந்தவுடன் அவன் அவர்களிடம், “எகிப்துக்குப் போகின்றவர்களிடத்தில் நீங்கள் விற்ற உங்கள் சகோதரன் யோசேப்பு நான்தான்!
រុករក ஆதியாகமம் 45:4
5
ஆதியாகமம் 45:6
இரண்டு வருடங்களாக நாடெங்கும் பஞ்சம் உண்டாயிருக்கிறது; உழுதலும், அறுவடை செய்தலும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இருக்காது.
រុករក ஆதியாகமம் 45:6
6
ஆதியாகமம் 45:3
யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நான்தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கின்றாரா?” என்று கேட்டான். ஆனால் அவனது சகோதரர்களால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவன் முன்னிலையில் அவர்கள் திகிலடைந்திருந்தார்கள்.
រុករក ஆதியாகமம் 45:3
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ